{[['
']]}

பிரிட்டனைச் சேர்ந்த, இ.பி.எஸ்.ஆர்.சி., ஆய்வகம், அந்நாட்டின் சிறந்த அறிவியல் புகைப்படப் போட்டி முடிவுகளை அண்மையில் அறிவித்தது.
பல புகைப்படக்காரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், 'அயனிப் பொறியில் சிக்கிய அணு' என்ற தலைப்பிலான படத்திற்கு, முதல் பரிசு கிடைத்துள்ளது.
இந்தப் புகைப்படத்தை எடுத்தவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டேவிட் நார்ட்லிங்கர். இவர், ஒற்றை அணுவை சாதாரண கண் கொண்டு பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து, தன் ஆய்வகத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறார்.
புகைப்படத்தில், இரண்டு உலோக மின் முனைகளுக்கு நடுவே அம்புக்குறி சுட்டிக்காட்டும் இடத்தில், ஒரு வெண்புள்ளி போல தோன்றுவது தான் அந்த ஒற்றை அணு.
இரு உலோக முனைகளிலிருந்து வெளிப்படும் மின்காந்தப் புலத்தில் சிக்கி, அதிகம் அசையாமல் மிதக்கும், 'ஸ்ட்ரோன்டியம்' அணு மீது, நீல- ஊதா லேசரை செலுத்தினால், அதன் ஒளியை வாங்கி, மீண்டும் அந்த அணு உமிழ்கிறது. இது, புகைப்படம் பிடிக்கும் நேர அளவுக்கு போதுமானதாக இருந்தது என, தன் சாதனையை விளக்கி இருக்கிறார் டேவிட்.
Post a Comment