Posted by Red Queen
Posted on February 24, 2018
with No comments
Cinema,
Personality,
{[['

']]}
இந்த நாளில் (24ம் தேதி) அன்று, அதாவது 2010 பிப்ரவரி 24-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நிகழ்ந்த சாதனையை செய்தார்.
பிப்ரவரி 24, 2010-ல் குவாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஓருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் விளாசிய உலக சாதனையை நிகழ்த்தினார்.
சேவாஜ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 200 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்களையும், யூசுப் பத்தான் 36 ரன்களையும் தோனி 68 ரன்களையும் அதிரடி முறையில் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. டேல் ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 89 ரன்கள் விளாசப்பட்டார். இதில் இவர் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். வெய்ன் பார்னெல் 10 ஓவர்களில் 95 ரன்கள்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 114 ரன்கள் விளாசியும் பயனற்று 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்குச் சுருண்டு, தொடரை இழந்தது. இந்திய அணியில் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா, யூசுப் பத்தான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அன்று டெண்டுல்கர் ஆட்டம் முடிந்து கூறும்போது, “இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இந்த இரட்டைச் சத சாதனையை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனெனில் இவர்கள்தான் எனது ஏற்றத்திலும் தாழ்விலும் 20 ஆண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது, யூசுப் பத்தான் இறங்கி ஆட்டத்தின் திசையை மாற்றினார், தோனி பந்துகளை நன்றாக அடித்தார். இவர்களது பிக் ஹிட்டிங்கினால்தான் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.
Post a Comment