Latest Movie :
Recent Movies
Showing posts with label Astro. Show all posts
Showing posts with label Astro. Show all posts

உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

ரேகைகளிலேயே மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகை. உலகின் பல பகுதிகளில் இந்த ஆயுள் ரேகையைக் கொண்டு ஒருவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் அல்லது எந்த வயதில் இறப்பார் என்பதை கணக்கிடுவார்கள். ஆனால் இது மூடநம்பிக்கை என்பது தெரிந்தும், இன்னும் நிறைய மக்கள் இதனை நம்பி வருகின்றனர்.
ஆயுள் ரேகையின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதன் தன்மையைக் கொண்டு ஒருவரது குணம், உடல் நலம், மற்றவர்களுடனான உறவு மற்றும் வாழ்க்கை போன்றவற்றை அறிய முடியும். சரி, இப்போது உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.



எது ஆயுள் ரேகை?

ஆயுள் ரேகை என்பது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலுக்கு நடுவில் இருந்து கீழ் நோக்கி சென்று மணிக்கட்டுடன் இணையும். இந்த ஆயுள் ரேகை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

தடித்த மற்றும் மெல்லிய ஆயுள் ரேகை

சிலரது கைகளில் ஆயுள் ரேகை தடிமனாகவும் ஆழமாகவும், இன்னும் சிலரது கைகளில் மெல்லியதாகவும் லேசாகவும் இருக்கும். ஆயுள் ரேகை தடிமனாக இருந்தால், அவர்கள் அடிக்கடி சிறுசிறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். அதுவே மெல்லியதாக இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பார்கள்.
குட்டையான ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை குட்டையாக அல்லது சிறியதாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு செல்வதற்கு ஏற்ற ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பர். இந்த வகையான ரேகையைக் கொண்டவர்கள் எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்கமாட்டார்கள் மற்றும் இவர்களது பொறுப்புக்களை நிறைவுப்படுத்த அடிக்கடி யாரேனும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

உடைந்த ஆயுள் ரேகை

ஆயுள் ரேகையில் பிளவு கொண்டவர்கள் தனிப்பட்ட பண்பினைக் கொண்டவர்களாக இருப்பர். அதுவும் அவர்கள் ஒரு செயலை எடுத்தால், அதை முடிக்காமல் ஓய்வு எடுக்கமாட்டார்கள். மேலும் எடுக்கும் செயலை முற்றிலும் முடித்துவிட்டு தான், மற்றொரு செயலில் ஈடுபடுவார்கள்.
இரட்டை ஆயுள் ரேகை

சிலருக்கு இரண்டு ஆயுள் ரேகை இருக்கும். இப்படிப்பட்ட ரேகையைக் கொண்டவர்கள் வலிமையானவர்களாகவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த அதிர்ஷ்டசாலிகள் எப்போதும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பர்.

சுக்கிர மேடு மற்றும் ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை சுக்கிர மேட்டில் இருந்து விலகி காணப்பட்டால், அவர்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பார்கள். அதுவே சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கி காணப்பட்டால், அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

குரு மேடு மற்றும் ஆயுள் ரேகை
ஆயுள் ரேகை குரு மேட்டில் ஏறிக் காணப்பட்டால், அவர்கள் லட்சிய உணர்வு, தன்னடக்கம், உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கீழ் செவ்வாய் மேடு மற்றும் ஆயுள் ரேகை

ஒருவருக்கு ஆயுள் ரேகையானது கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்தால், அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள், அடக்கம் இல்லாதவர்களாக இருப்பர், சண்டைகளில் அதிகம் ஈடுபடுபவர்களாக இருப்பர்.

ஆயுள் ரேகையின் மேலான ரேகை ஆயுள்

ரேகையில் இருந்து ஒரு ரேகை மேல் நோக்கி குரு மேட்டை பார்த்தவாறு இருந்தால், அத்தகையவர்கள் வாழ்வில் எப்போதும் வெற்றியைக் காண்பவர்களாக அதிர்ஷ்டமுடையவர்களாக இருப்பர்.
{[['']]}

இந்த ராசியில பிறந்தவங்க இப்படி தான் இருப்பாங்களாம்... மாத்தவே முடியாதாம்!

ஜோதிடம், இராசி பலன் எல்லாம் மூடநம்பிக்கை என்று ஒருபக்கம் நாம் விவாதம் செய்துக் கொண்டிருக்கையில் அமெரிக்கர்கள் ஓர் ஆராய்ச்சியில், ஜோதிடம் என்பது மெய் விஞ்ஞானம் என்று கூறுகின்றனர்.

ஆம், இன்று பல போலியான ஆட்கள் பொய் கூறுவதை வைத்து நமது முன்னோர்கள் கூறி சென்ற உண்மைகளை நாம் மூடநம்பிக்கை என சொல்வது தவறு. நட்சத்திரங்களில் நிலையை பொறுத்து பூமியில் மாற்றங்கள் ஏற்படுவதை போல மனித மனதுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர்.
அந்த வகையில், பிறக்கும் போதே இந்த குழந்தை இந்த இராசி, நட்சத்திரம் என்று குறிக்கப்பட்டுவிடுகிறது. அந்த இராசி நிலைபாடுகள் எந்த மாதிரியான குணாதசியத்தை வெளிப்படுத்துகின்றது என்று உங்களுக்கு தெரியுமா....


மேஷம் 

இவர்கள் காதலில் குதிரையை போல, விழுந்த வேகத்தில் எழுந்து விடுவார்களாம். உடலுறவில் நாட்டம் அதிகமானவர்களாக இருப்பார்களாம். அனைத்து விஷயங்களிலும் வேகம் காட்டினாலும், அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்களாம்.
ரிஷபம் 

மிகவும் அமைதியாக, மெதுவாக முடிவெடுக்கும் மனநிலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும், முடியுமா, செய்தால் நன்மை விளையுமா என்று அனைத்தையும் யோசித்து தான் செய்வார்கள்.

மிதுனம்

இயற்கையாகவே நிறைய அறிவாற்றல் கொண்டவராக இருப்பார்களாம். புத்திக் கூர்மை அதிகமாக இருக்குமாம். சரியாக மதிப்பீடு செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். உறவுகளுக்கு மத்தியில் மிகவும் இனிமையாக நடந்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம் 

இவர்கள் மிகவும் எளிமையாக இருப்பார்களாம், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். இவர்கள் எதிலும் பாதுகாப்பாக இருக்க நினைப்பார்கள் மற்றும் உணர்சிப்பார்வமான மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம் 

ஆளுமை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். தலைமை வகிக்க விரும்புவார்கள். வீரம், தைரியம், மேலாண்மை, இறையாண்மை போன்றவற்றில் இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள். மற்றவர்களை மதிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இருக்கும்.

கன்னி 

இவர்கள் வெட்கம் மற்றும் கூச்சம் சுபாவம் கொண்டவர்கள். ஊரோடு ஒத்து வாழாமல், தனிமையிலே இருப்பார்கள். யாருக்காகவும் இவர்களது சுபாவத்தை குணாதசியத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

துலாம் 

இவர்கள் எப்போதும் சமநிலையான மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவரிடதிலும் சமநிலையை எதிர்பார்பார்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டார்கள். எந்த காரியத்தையும், ஆராய்ந்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம் 

தைரியமும், ஆதிக்கமும் இவர்களது குணமாக இருக்கும். நேர்பட பேசும் குணம் உடையவர்கள், நேருக்கு நேர் போட்டியிடுவார்கள். சுதந்திரமாக இருப்பார்கள். புத்திக்கூர்மையும், தொலைநோக்கு பார்வையும் அதிகமாக இருக்கும் இவர்களிடம்.

தனுசு 

இவர்கள் கடவுள் பாதி, மிருகம் பாதி என்பது போல குணமுடையவர்கள். ஆன்மீகமும், தத்துவங்களும் இவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கும். தனித்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். ஆர்வமும், தைரியமும் அதிகமுள்ள இவர்கள் எதையும் முன்கூட்டியே செய்யும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

மகரம் 

எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள், கூச்ச சுபாவம் அதிகமாக இருக்கும் இவர்கள், பெரும்பாலும் அனைத்து விஷயங்களையும் இவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். எடுத்த காரியத்தை பொறுமையாகவும், அதே சமயம் நிலையானதாகவும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

கும்பம்

இறையாண்மையிலும், ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உபதேசம் வழங்குவார்கள். உணர்வுபூர்வமாக செயல்படுவார்கள்.

மீனம் 

நல்லது, தீயது இரண்டு பக்கங்களிலும் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். எதையும் வெளிப்படையாக பேசும் பண்புடையவர்கள். அறிவியல், ஆன்மிகம் இரண்டையும் சார்ந்திருப்பார்கள். எந்த விஷயத்திலும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், மென்மையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
{[['']]}

மிகவும் நம்பிக்கைக்குரிய 6 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு மாதிரியான குணாதிசயங்கள் இருக்கும். அதுவும் அது அந்த ராசிகளின் அதிபதியைப் பொறுத்து குணாதிசயங்கள் வேறுபடும். அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் கோபக்காரராகவும், சிலர் அதிகம் பொய் பேசுபவராகவும், இன்னும் சிலர் நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பர். சில ராசிக்காரர்களுக்கு மற்றவர்களைப் பற்றி புறணி பேசும் பழக்கமும், ஏமாற்றும் குணம் கொண்டவர்களராகவும் இருப்பர். இதுப்போன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும வெவ்வேறான குணங்களைக் கொண்டு இருப்பார்கள்.

இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பவர்கள் ஒரு சிலர் தான் இருப்பர். அந்த வகையில் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களான ஒருசில ராசிக்காரர்கள் உள்ளனர். இந்த ராசிக்காரர்களிடம் எப்பேற்பட்ட ரகசியத்தையும் நாம் கூறலாம். இவர்கள் தங்கள் உயிரே போனாலும், அந்த ரகசியத்தை மற்றவர்களிடம் கூற மாட்டார்கள். அந்த அளவில் ரகசியத்தைப் பாதுகாப்பதில் சில ராசிக்காரர்கள் கெட்டிக்காரர்கள்.



விருச்சிகம்

யாராலும் எந்த ஒரு விஷயத்தையும் யாரேனும் ஒருவரிடமாவது சொல்லாமல் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படி நீங்கள் உங்களது ரகசியத்தை பகிர்ந்து கொள்ள நினைத்தால், விருச்சிக ராசிக்காரர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். இவர்களை நம்பி யார் எதை சொன்னாலும், அதை ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களிடம் எதையும் அவ்வளவு எளிதில் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். அதிலும் இவரை நம்பி தங்களது ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டால், அவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லமாட்டார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சத்தியத்தையும், ரகசியத்தையும் மதித்து நடப்பவர்கள். உங்களது ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால், இந்த ராசிக்காரர்களிடம் சொல்லலாம். இவர்கள் இயற்கையாகவே பொறுமைசாலி மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம அதிகம் கொண்டவர்கள். இவர்களது வாயில் இருந்து ஏதேனும் தகவலைப் பெற நினைத்தால், நிச்சயம் யாராலும் முடியாத ஒன்றாகவே இருக்கும். அந்த அளவில் இந்த ராசிக்காரர்கள் ரகசியத்தைப் பாதுகாப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களும் ரகசியத்தைப் பாதுகாப்பார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்கள், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், எப்பேற்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும் உறுதுணையாக உங்கள் பக்கம் நிற்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் ஸ்மார்ட் மட்டுமின்றி, நம்பிக்கையுள்ளவர்களும் கூட. இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பர்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் ரகசியத்தை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது மட்டுமின்றி, எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் அந்த விஷயத்தை மற்றவர்களுக்கு எதிராக பயன்படுத்தமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலி. ஒருவரது ரகசியத்தை வெளியே கூறுவதால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்ல என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு பொய் சொல்பவர்களைப் பிடிக்காது. எதிரியாக இருந்தாலும் உண்மையாக இருப்பர்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்களிடம் வந்து ஒருவர் ரகசியத்தைக் கூறினால், சிறப்புரிமை உள்ளவர்களாக உணர்வதோடு, ரகசியத்தைக் காப்பதை பெருமையாகவும் நினைத்துக் கொள்வர். இந்த ராசிக்காரர்களுக்கு மற்றவர்களது ரகசியத்தை வெளியே கூறி நம்பிக்கையை உடைக்க அல்லது துறக்க விரும்பமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உள்ளுணர்வுடன் இருப்பர். மீன ராசிக்காரர்களிடம் ரகசியத்தை ஒருவர் கூறினால், அந்த ரகசியம் அவர் இறந்தாலும் அவர்களுடனேயே சென்றுவிடுமே தவிர, வெளியே வராது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கிசுகிசு எப்படி ஒருவரை பெரிதாக பாதிக்கும் என்பது நன்கு தெரியும். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களது ரகசியத்தை ஒரு போதும் வெளியே சொல்லமாட்டார்கள் மற்றும் மிகவும் பத்திரமாக மனதிலேயே வைத்திருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமுள்ளவர்கள் மற்றும் அன்பானவர்கள். இவர்கள் ஒருவரது ரகசியத்தை வெளியே கூறி, தனது பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். முக்கியமாக சிம்ம ராசிக்காரர்கள் கோபக்காரராக இருந்தாலும், தங்களுக்கு பிடித்தவர்கள் என்ன தான் தவறு செய்தாலும், அதை எளிதில் மன்னிக்கும் கருணை உள்ளம் கொண்டவர்கள்.
{[['']]}

காதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை?


இன்றைய கால கட்டத்தில் காதல், கலப்புத் திருமணங்கள் என்பது சர்வ சாதாரணமாக போய்விட்டது. 

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஆணும் பெண்ணும் சந்திப்பதும் பேசுவதும் ஒரே கல்லூரியில் சேர்ந்தே படிப்பதும் ஒரே இடத்தில் பணியாற்றுவதும் காரணங்கள். 

திருமண விநோதங்கள்

காதல் திருமணங்கள் என்பது மிகவும் விநோதமானது. கண்டதும் காதல், அல்லது பல வருட காதல், மாணவ பருவத்திலேயே காதல், பணிபுரியும் இடங்களில் காதல், முதலாளி, தொழிலாளி இடையே காதல் என்று பல வகைகள் உள்ளன. அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருக்கும் இருவர், காதல் மூலம் இணைகிறார்கள்.





 தாய் தந்தையர் தம் மகன், மகள் பற்றி பல மனக்கோட்டை கட்டி வைத்திருப்பர். அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், பெரிய படிப்பு, பெரிய உத்யோகம், பெரிய இடம் என்று ஏதேதோ கற்பனையில் இருப்பார்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு வந்து பெற்றோரின்  மனக்கோட்டையைத் தகர்ப்பார்கள். இதுதான் கோள்களின் விளையாட்டு.

ஜாதகமும் - காதல் திருமணமும்

காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அம்சங்கள்,  பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இருந்தாலும் சுருதி, யுக்தி, அனுபவம் மிக முக்கியமாகும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. அதேநேரத்தில் காதல் கிரக அமைப்புகள் இருந்தும் காதலிக்காமல் இருக்கலாம். அதற்கு வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் அமையாமல் இருக்கலாம். ஆனால் கிரக அமைப்புகள் இரண்டு அல்லது அதற்குமேல் அமையுமானால், நிச்சயம் காதல் திருமணம்தான். திருமண வயது நடைபெறும்போது  கோசார நிலை மற்றும் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் காதல் செய்யத் தூண்டும், காதல் வயப்பட நேரிடும். காதல் திருமணம் செய்ய அந்த வயதுதான் முக்கிய காரணம். ஆகையால் இத்தகைய கிரக அமைப்பு உள்ளவர்களின் பெற்றோர்கள் முன் கூட்டியே ஜோதிடர்களிடம் கலந்தாலோசித்து எச்சரிக்கையாக இருக்கலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனித்து நல்லதை எடுத்துச் சொல்லி மனதில் பதிய வைக்கலாம். சிலருக்கு நல்ல தசாபுக்திகள் நடந்து வந்தால் சொல்வதைக் கேட்டு ஓரளவு மனம் மாறக்கூடும். ஏனென்றால் காதலிக்கும் அனைவரும் மணம் முடிப்பதில்லை.

காதல் கொள்வதற்கான கிரக அமைப்புகள்

காதல், கலப்புத் திருமணங்களுக்கு அவரவர் ஜாதக கிரக நிலைகளே முக்கிய காரணம். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையும் பிராப்தமும்தான் காரணம். லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை, ஜாதகத்தில் அவர்களுக்கு இருக்கும் பலம் ஆகியவைதான் காதல் திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. கீழ்க்காணும் அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவை காதல் திருமணத்துக்கு வழிகாட்டுபவையாகும்.

1. எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 இடங்களில் தனித்து இருப்பது. குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாறு தனித்த குரு இருப்பது காதல் திருமணம் செய்ய காரணமாகும்.

2. ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்குரியவன் ஆகிய இரண்டு இடங்களில் ராகு-கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம். 

3. களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு-கேது சேர்க்கை பெற்றால் காதல் திருமணம்.

4. ஏழாம் இடத்தில் கேது இருந்து, லக்னாதிபதியும், சுக்கிரனும், பலம் குறைந்து இருந்தால் கலப்புத் திருமணம்.

5. லக்னத்தில் ராகு-சனி சேர்க்கை பெற்று குரு பார்வை இல்லையென்றால் காதல் திருமணம்.

6. ஏழாம் வீட்டில் செவ்வாய், ராகு சேர்க்கை காதல் திருமணம்.

7. பன்னிரண்டாம் இடத்தில் உள்ள பலம் குறைந்த குரு குலதர்மத்திற்கு விரோதமான திருமணத்தை ஏற்படுத்துவார்.

8. ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் சேர்க்கை பெற்று இருவரில் ஒருவர் கேது சாரத்தில் இருந்தால் காதல் திருமணம்.

9. லக்னாதிபதி, சுக்கிரன், ஏழாம் அதிபதி மூவரும் சேர்ந்து 2, 7, 8, 12ல் இருந்தால் பல பிரச்னைகளுக்கு நடுவே திருமணம் நடக்கும்.

10. லக்னத்திலோ அல்லது ஏழாம் வீட்டிலோ சந்திரன் இருந்தால் காதல் கூடிவரும்.

11. சனி-சந்திரன் சேர்க்கை, பார்வை, லக்னாதிபதி பலம் குறைவு ஆகியவற்றால் திருமணத்திற்கு முன்பே தாம்பத்ய உறவு ஏற்படும்.

12. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருந்தால் மதம் மாறி திருமணம் செய்விப்பார்.

மேற்கூறிய இந்த கிரக அமைப்புகள்படி, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். இந்த அமைப்புகளுடன் பிறந்தவர்கள் பண்டைய காலங்களில் இல்லையா? அவர்கள் எல்லாம் காதல் திருமணம் செய்தார்களா என்று கேள்விகள் எழலாம். அந்தக்கால கட்டத்தில் ஆண், பெண் சந்திப்பது என்பதே அரிது. அதுவும் பால்ய விவாகமும் நடைபெற்ற காலம். பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்த உடனே இது தாய்மாமனுக்கு, அக்கா மகனுக்கு என்று முடிவு செய்து விடுவார்கள். மேலும் சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு கட்டுக்கோப்பாக இருந்த காலம். ஆகையால் காதல் திருமணங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக லேசாக வளர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேர்விட்ட இந்த செடி, இந்த காலத்தில் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. ஆதலால், காதல், கலப்புத் திருமணங்கள் அதிகரித்து உள்ளன. 

திருமணம் நடைபெறும் காலம்

காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. மேலும், ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது. சந்திரன், புதன், ராகு கேது தசைகளில் திருமண பந்தம் கூடிவருகிறது; சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger