{[['']]}
சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலுக்கும் தமக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என வட கொரியா அறிவித்துள்ளது.
சிரியாவுக்கு இராசாயண ஆயுதங்கள் தயாரிப்பபதற்கான பொருட்களை வடகொரியா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டமையை தொடர்ந்தே வடகொரியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
இரசாயன ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்களை சிரியாவிற்கு வடகொரியா அனுப்பியுள்ளதாக அண்மையில் அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் இது தொடர்பிலான அறிக்கையொன்றையும் ஐ.நா வெளியிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தமது நாட்டிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனைக் கதை இது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமது குடியரசு இரசாயன ஆயுதங்களை தயாரிப்தும் விநியோகிப்பதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இரசாயன ஆயுதங்களை எதிர்ப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த ஆறுமாதங்களில் சிரிய அரச நிறுவனங்களுக்காக சென்ற வடகொரியாவின் இரண்டு கப்பல்கள் இடைமறிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment