Latest Movie :
Recent Movies
Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கியது


சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் துவங்கியது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில், திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசவுரி என்ற படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தி ஷேப் ஆப் வாட்டர் திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கவலை அளிக்கும் விஷயமாக கருதப்படும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டும் வகையில் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர்கள் ஆரஞ்சு நிற கோர்ட் அணிந்து வந்திருந்தனர். 
{[['']]}

விஜய்க்கு தலைவலியாக மாறிய விஷயம்

மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் போட்டோ சூட்டின்போது புகைப்படங்கள் வெளியானது. 
பின்னர் முதல் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்து முடிந்த நிலையில் விஜய் சண்டையிடும் காட்சியும் படங்களாகவும், வீடியோவாகவும் வெளியே கசிந்து சமூகவலைத்தளங்களில் வைரலானதால் பட குழுவிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. 

இதனால் படப்பிடிப்பு தளத்தில் செல்போன் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் மறுபடியும் இந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 
ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படங்களை அதிகமாக பகிரப்பட்டு டிரெண்டாக்கி வருவதால் படக்குழுவினர் செய்வதறியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


{[['']]}

தென் இந்திய திரைப்பட உலகில் ஸ்ட்ரைக் ! புதிய படங்கள் இன்று முதல் ரிலீசாகாது

தென் இந்தியா முழுவழுதும் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பட உலகில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 

இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கின்றன. இந்நிலையில் இந்த கட்டணங்கள் அதிகம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும்  அவர்கள் வலியுறுத்தி, தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி இப்பிரச்சினைக்கான இறுதி முடிவு எடுப்பது குறித்து ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று மாலை நடந்தது. 

இந்த கூட்டத்தில் டிஜிட்டல் சேவை கட்டண விகிதங்களுக்கு எதிராக புதிய படங்களை வெளியிடுவதை இன்று முதல் நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வற்புறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி பட அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் இம்மாதம் திரைக்கு வர இருந்த இரும்புத்திரை, கரு, பக்கா, எனை நோக்கி பாயும் தோட்டா, உத்தரவு மகாராஜா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்கள் தள்ளிப்போகின்றன. 



{[['']]}

வெளியானது ! ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணம்!!!

நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி மரணமடைந்தார் என தடவியல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. மேலும் அவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு செல்லப்படவுள்ளது.
தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் தொடர்பான தடவியல் அறிக்கை அவரின் குடும்பத்தினரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி  மரணமடைந்துள்ளார் எனவும் அவரது உடலில் அல்கஹோல் கலந்திருந்ததாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி அவர் மரணமடைந்தாரா? என்பது தெளிவாக தெரியவில்லை.

மயக்கம் ஏற்பட்டு அவர் நீரில் மூழ்கியிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் அவரின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் எதுவுமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
According to the report, the actress Sridevi was drowned in the bathtub and died.

Sridevi went to her husband and daughter to attend a wedding in Dubai. His body will be taken to India by a special flight tonight.

{[['']]}

அனில் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் கொண்டுவரப்படுகிறது நடிகை ஸ்ரீதேவியின் உடல்!

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அனில் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் மும்பை கொண்டு வரப்படுகிறது உறவினரின் திருமண நிகழ்ச்சியின் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கேயே மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் நாளைதான் இந்தியா கொண்டு வரப்படும் என அவரது கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானி விமானத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான விமானம் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன விமானம் இந்திய தொழிலதிபர்கள் வரிசையில் டாப்பில் உள்ள அனில் அம்பானி, ரிலையன்ஸ் ட்ரான்ஸ்போர்ட் & ட்ராவல் லிமிட்டெட் நிறுவனத்தின் எம்பரர் 135BJ விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார்.

விமானம் புறப்பட்டது 13 இருக்கைகளை கொண்ட அந்த விமானத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த விமானம் இன்று பகல் 1.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது.
நாளை உடல் வருகை அனில் அம்பானியின் விமானத்தில் நாளை மும்பை கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




{[['']]}

ஒரு அழகான கதை மறைந்தது: ஸ்ரீதேவி மறைவுக்கு மோடி, ரஜினி, கமல் முதல் சச்சின், சந்திரபாபு நாயுடு வரை புகழாஞ்சலி

நடிகை ஸ்ரீதேவு மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 55. இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.

சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலமான்வர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி தன் ட்விட்டரில், “திரை உலகின் முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவினால் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன். இவரது திரை வாழ்வில் நீண்ட நெடியது, பலதரப்பட்ட கதாபாத்திரங்களையும் மறக்க முடியாத நடிப்புத்திறனையும் கொண்டது. அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்: நடிகை ஸ்ரீதேவி மறைவு அதிர்ச்சியளிக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை இவரது மரணம் நொறுக்கிவிட்டது. மூன்றாம்பிறை, லாம்ஹே, இங்கிலிஷ் விங்கிலிஷ் ஆகிய படங்களில் இவரது நடிப்பு மற்ற நடிகர்களுக்கு அகத்தூண்டுதலாக அமைவது. ஆழ்ந்த இரங்கல்கள்.

ரஜினிகாந்த்: திரையுலகின் உண்மையான நண்பரை இழந்தேன். உண்மையான லெஜண்ட். நான் அதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளேன். நான் என் உண்மையான தோழியை இழந்தேன், திரைத்துறை உண்மையான் லெஜண்டை இழந்துள்ளது. என் இதயம் அவரது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் உள்ளது. அவர்களது சோகம் என் சோகம். ஆன்மா சாந்தியடையட்டும்.

கமல்ஹாசன்: ஸ்ரீதேவியை விடலைப்பருவம் முதல் அருமையான பெண்மணியாக வளரும் வரை பார்த்திருக்கிறேன். அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு அவர் தகுதியானவரே. கடந்த முறை அவரைச் சந்தித்தது முதல் அவரது நினைவுகள் என் உள்ளத்தில் பளிச்சிடுகின்றன. சத்மாவின் தாலாட்டு என்னை இப்போது ஆக்ரமித்துள்ளது, அவரை இழந்து விட்டோம்.

சவுந்தர்யா ரஜினிகாந்த்: வீ வில் மிஸ் யூ பப்பிக்கா, மிகவும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்படுத்துகிறது.

சந்திரபாபு நாயுடு: பன்மொழி நடிகை, தெலுங்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அவரது ஈடு இணையற்ற நடிப்புத் திறமையினால் இந்தியாவின் பெருமைக்குரிய நடிகையாக அவர் திகழ்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம்: ஸ்ரீதேவி மறைவுக்காக வருந்துகிறோம். மிகமிகச் சிறந்த நடிகை. அவரது நடிப்புத்திறன் மூலம் நம் இதயங்களில் என்றென்றும் குடிகொண்டிருப்பவராக உள்ளார். அவரை நேசிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். யுபிஏ அரசு அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது.

சசிதரூர்: ஆஸ்திரிய மகாகவி ரைனர் மரியா ரில்காவின் கவிதையிலிருந்து மேற்கோள் காட்டியதன் தமிழ் வடிவம்: உன் பிரசன்னம் மணியின் சப்தம் போல் இரவில் ரீங்காரமிடட்டும், பூவுலகம் அறியாது உன்பெயரை, மவுன பூமிக்கு ரகசியக் குரலில் கூறு: நான் பாய்ந்து கொண்டிருக்கிறேன் என்று, ஒளிரும் நீருக்குச் சொல்: நான்தான் என்று, என ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதல்வர் ஓபிஎஸ்: நடிகை ஸ்ரீதேவியின் துரதிர்ஷ்டமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது வாழ்வும், உதாரணமாகத் திகழும் திரை வாழ்வும் பலதலைமுறைகளைக் கடந்து பலரையும் ஈர்த்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

சச்சின் டெண்டுல்கர்: நம்மிடையே ஸ்ரீதேவி இனி இல்லை என்பதை ஜீரணிக்கக் கடினமாக உள்ளது. என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு என் இதயம் கனிந்த இரங்கல்கள்.


{[['']]}

நாட்டின் முதல் நடிகை சூப்பர் ஸ்டார்: ராஜமவுலி புகழாஞ்சலி

‘லெஜண்ட்’ ஸ்ரீதேவி மறைவையடுத்து திரைத்துறை மற்றும் அனைத்துத் துறையைச் சேர்ந்த பிரபலங்கலும் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “இந்தத் துயரச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. நாட்டின் முதல் நடிகை சூப்பர்ஸ்டார். 54 வயதில் 50 வருடம் திரைத்துறையில் அபாரமான நடிப்புத்திறன். என்னதொரு பயணம். எதிர்பாராத முடிவு. ஸ்ரீதேவி குரு உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகை என்று தனது இரங்கல் செய்தியில் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது. அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா அமைதி அடையட்டும் என நடிகை திரிஷா ட்வீட் செய்துள்ளார்.

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டது. இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என நடிகை பிரீத்தி ஜிந்தா ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம் என நடிகை பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை என நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேஹா தூபியா, நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

நடிகை ராதிகா சரத்குமார்: ஸ்ரீதேவி கபூர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது, இன்னமும் நம்ப முடியவில்லை. அவருடன் இணைந்து நடித்துள்ளேன் என்னால் நம்ப முடியவில்லை.

ஷேகர் கபூர்: ஒரு பெரிய காலக்கட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு அழகான கதை முடிவுக்கு வந்துள்ளது, ஒரு அபாரமான ஸ்பிரிட் நம்மை நேசத்துடன் விட்டுப் பிரிந்தது.

சுஷ்மிதா சென்: மிகப்பெரிய மாரடைப்பினால் மேடம் ஸ்ரீதேவி மரணம் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

குஷ்பூ சுந்தர்: துயரமான செய்தியுடன் எழுந்தேன். ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை. அதிகபட்ச திறமை, அதி அழகு, வார்த்தைகளால் துயரத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவரது குழந்தைச் சிரிப்பு இனி பார்க்க முடியாதது.

மாதவன்: திரைத்துறை மீண்டும் அதே நிலைமையில் இனி இருக்காது அவரது மறைவு எனக்கு கடும் அதிர்ச்சியளிக்கிறது, அவரது குடும்பத்தினர் என்னமாதிரியான துயரத்தில் இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.


ஸ்ரீதேவி மரணம் மாரடைப்பு துபாய் இயக்குநர் ராஜமவுலி சினிமா தமிழ்சினிமா கவுதமி குஷ்பு sridevi Death Tamil Cinema Rajamouli
{[['']]}

மனிதாபிமானமுள்ளவர் ஸ்ரீதேவி: வீட்டு வாட்ச்மேன் நெகிழ்ச்சி

ஸ்ரீதேவி மனிதாபிமானத்துடன், எளிமையாக பழகக்கூடியவர் என்று அவரது வீட்டு முன்னாள் வாட்ச்மேன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ்த்திரையுலகம் தாண்டி இந்திய திரையுலகிலும் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தியவர். குழந்தை நட்சத்திரமாய் தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகளுடன் நடித்த ஸ்ரீதேவி பின்னர் கதாநாயகியாக ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வlலம் வந்தார்.

தென் இந்திய மொழிகள் கடந்து இந்திப்படத்திலும் கால் பதித்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். 1980 களில் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் ஸ்ரீதேவி சென்னையில் வசித்தார்.

அப்போது அவரது வீட்டில் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் தேவை என்பதால் நெல்லையை சேர்ந்த மாலைராஜா என்பவரை ஸ்ரீதேவி வேலைக்கு அமர்த்தினார். மாலைராஜா இன்றும் ஸ்ரீதேவி வீட்டுக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாட்ச்மேனாக உள்ளார்.

அவர் ஸ்ரீதேவி மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ஸ்ரீதேவிப்பற்றி அவரது நினைவை பதிவு செய்தார்.

“நெல்லையிலிருந்து வேலைக்கு வந்தேன். மிகப்பெரிய ஸ்டார் வீட்டில் வேலை எப்படி நடத்துவார்களோ என்ற தயக்கத்துடனே போய் நின்றேன்.

என்ன பெயர் என்ன என்று கேட்டார் மாலைராஜா மேடம் என்றேன். மாலை ராஜா எல்லாம் கிடையாது இனி நான் உங்களை ராஜா என்றுதான் கூப்பிடுவேன் சரியா என்று மிக எளிமையாக பெரிய கதாநாயகி என்ற எண்ணம் இல்லாமல் சாதாரணமாக பேசினார். அங்கு சேர்ந்திருந்த நேரத்தில் தான் எனக்கு திருமணமாகி இருந்தது. அவர் என்னை வேலைக்காரனாக பார்க்கவில்லை.

சக மனிதராக மதித்து நடத்துவார். எளிமையானவர் பந்தா அவருக்கு வராத ஒன்று. அவரது வீட்டில் வாட்ச்மேனாக இருந்த நேரத்தில் தான் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. அவர் எனது பிள்ளைகள் படிப்பு மற்ற விஷயங்களில் பெரிய அளவில் உதவி இருக்கிறார்.

சூட்டிங்குக்காக அவர் வெளியே போகும் போதெல்லாம் ராஜா உங்களை நம்பித்தான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லி விட்டுத்தான் செல்வார். பின்னர் அவரது வாழ்வில் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக இருந்தார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடம் இந்தியில் தான் பேசுவேன். அவரும் எளிமையாக பழகுவார்.

நீ வேலையை விட்டு சென்றால் உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் நேரடியாக பேசு என்று ஸ்ரீதேவி அடிக்கடி சொல்வார். குடும்ப விபரங்களை கேட்பார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்ததால் இயல்பாகவே அவரிடம் எளிமை இருந்தது. பின்னாளில் அவர் மும்பைக்கு சென்ற பின்னர் தொடர்பு குறைந்துவிட்டது.

நானும் எதிர்புறம் உள்ள பார்ட்மெண்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டேன். அவரது மரணச்செய்தியை காலையில் தான் அறிந்தேன். எனது சகோதரி ஒருவரை இழந்தது போல் உணர்கிறேன், ஸ்ரீதேவி என்றால் மனிதாபிமானத்துடன் இனிமையாக பழகும் அவரது முகம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை.” என்று வருத்தத்துடன் மாலைராஜா தெரிவித்தார்.



Search Keywords
மனிதாபிமானம் மிக்கவர், ஸ்ரீதேவி, வாட்ச்மேன், கதாநாயகி, எளிமை, sridhevi,human, kind, simple, personality, heroine, watchman,http://www.queenlanka.com
{[['']]}

Last visual of #Sridevi #SrideviDeath, we miss u Maam ! www.queenlanka.com

Shocked stunned. Still see her laughing talking. Unbelievable. Actor par excellence. A school in herself.. learnt so much from her. Still can’t believe it . A huge loss. #Sridevi

Still can't come to terms with this new reality. Can't imagine watching MoondramPirai , Aduththa Vaarisu , Chaalbaaz, English Vinglish or Kshanakshanam and think in past tense

  😥😥
  #sridevi #RIP





{[['']]}

நடிகை ஸ்ரீதேவி மரணம்: இறுதியாக எடுத்த புகைப்படங்கள் இணைப்பு!

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஸ்ரீதேவி நடிகர் Mohit Marwah வின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார், அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. 54 வயதாகும் அவர் நேற்று இரவு 11 - 11.30 மணிக்கு இறந்துவிட்டார் என நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் இளைய மகள் அவரோடு சென்றுள்ளார். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடித்துவருவதால் அவர் ஸ்ரீதேவியோடு செல்லவில்லை.
ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிந்து பிரபலங்கள் பலர் ஜான்விக்கு ஆறுதல் கூறுவதற்காக தற்போது அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.




{[['']]}

இந்த நாளில் அன்று... - லிட்டில் மாஸ்டர் சச்சின் செய்த தனித்துவ சாதனை

இந்த நாளில் (24ம் தேதி) அன்று, அதாவது 2010 பிப்ரவரி 24-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நிகழ்ந்த சாதனையை செய்தார்.

பிப்ரவரி 24, 2010-ல் குவாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஓருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் விளாசிய உலக சாதனையை நிகழ்த்தினார்.

சேவாஜ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 200 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்களையும், யூசுப் பத்தான் 36 ரன்களையும் தோனி 68 ரன்களையும் அதிரடி முறையில் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. டேல் ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 89 ரன்கள் விளாசப்பட்டார். இதில் இவர் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். வெய்ன் பார்னெல் 10 ஓவர்களில் 95 ரன்கள்.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 114 ரன்கள் விளாசியும் பயனற்று 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்குச் சுருண்டு, தொடரை இழந்தது. இந்திய அணியில் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா, யூசுப் பத்தான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அன்று டெண்டுல்கர் ஆட்டம் முடிந்து கூறும்போது, “இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இந்த இரட்டைச் சத சாதனையை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனெனில் இவர்கள்தான் எனது ஏற்றத்திலும் தாழ்விலும் 20 ஆண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது, யூசுப் பத்தான் இறங்கி ஆட்டத்தின் திசையை மாற்றினார், தோனி பந்துகளை நன்றாக அடித்தார். இவர்களது பிக் ஹிட்டிங்கினால்தான் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.


{[['']]}

அது என்ன மய்யம் ஆண்டவரே? போருன்னு சொல்லிட்டு படம் நடிக்கப் போகலாமா?- கமல், ரஜினியை கலாய்த்த கஸ்தூரி

ஆண்டவரே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், அதென்ன மய்யம் எனக் கேட்டு கமலையும், போருன்னு சொல்லிட்டு இப்படி பொசுக்குன்னு சினிமா நடிக்க ஒப்பந்தம் செய்கிறீர்களே என ரஜினியையும் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்தது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. தென் மாவட்டத்து பக்கம் மய்யம் என்றால் பிணம் என்று சொல்வார்கள் என சிலர் முகநூலில் விமர்சித்து வருகிறார்கள். கட்சி பேரை மக்கள் நீதி மய்ய கட்சின்னு சொல்லணுமா? மக்கள் நீதி மய்யம்னு சொல்லணுமா? என்றெல்லாம் கேள்விகள் வைக்கப்படுகிறது.


மய்யமா, மையமா என்றும் சிலர் கேட்கிறார்கள். இது குறித்து கமல் தரப்பில் பதில் எதுவும் இல்லாத நிலையில் நடிகை கஸ்தூரி மீண்டும் கமலை கிண்டல் அடித்துள்ளார்.  ஏற்கெனவே பிக்பாஸ் டீம் களம் இறங்கியதாக கமல் கட்சியை விமர்சித்த கஸ்தூரி தற்போது அவரது மய்யம் என்ற பேரை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

“எனக்கு ஒரு அய்யம், அது என்ன மய்யம்? மையம் வேற மய்யம் நா வேறா போலிருக்கு. சரி அத்த வுடு ம-ய்-ய-ம் இங்கிலீஷ்ல ma-y-ya-m தானே? maiAm மைஅம் னு வருது…


தூக்கம் போச்சு, அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்பவே தெரிஞ்சாகணும்.” என்று கேட்டுள்ளார்.

இதற்கு அவருக்கு பலரும் பதில் சொல்லியுள்ளனர். பலரும் கிண்டலடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தையும் தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

ரஜினி தனது அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனது அரசியல் பிரவேசத்தை போர் என அறிவித்தது விமர்சனத்துக்குள்ளானது.


அதை சுட்டிக்காட்டி, ''அட என்னப்பா போருக்கு படைகளை தயார்படுத்துவார்னு பார்த்தா, படம் தயார் பண்ண போறாராமே? அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். மறுபடி முதல்லயிருந்தா, ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு, கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்'' என்று ட்விட் செய்துள்ளார்.

{[['']]}

அர்ப்பணிப்புமிக்க நடிகர்களுடன் வளர விரும்புகிறார் மணிரத்னம்: சந்தோஷ் சிவன்

அர்ப்பணிப்புமிக்க நடிகர்களுடன் இயக்குநர் மணிரத்னம் வளர விரும்புகிறார் என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, சிம்பு என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் மணிரத்னத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், ''சுவாரசியமான நடிகர்களின் கலவை இப்படம். இயக்குநர் மணிரத்னம் அர்ப்பணிபுமிக்க திறமையான, நேரம் தவறாத  நடிகர்களுடன் வளர விரும்புகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

{[['']]}

டிடி கண்களுக்கு என்ன ஆனது?நீங்களே பாருங்கள்!



சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

பவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பம் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று டிடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் டிடி-யின் கண்கள் மிக வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பலரும் டிடி லென்ஸ் அணிந்துள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.






I phoneX potrait selfie ❤️jus getting a hang of it @apple #iphoneX #PortraitMode
{[['']]}

கமல்ஹாசனின் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’ மதுரையில் நடந்த விழாவில் அறிவித்தார்

நடுவில் நட்சத்திரத்துடன், 6 கைகள் கோர்த்த படத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார்.



மதுரையில் 21-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கப்போவதாக கூறிய அவர், இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கமல்ஹாசன் மதுரையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் சென்றார். ராமேசுவரத்தில் இருந்து, ‘நாளை நமதே’ என்ற பெயரில் நேற்று அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

நேற்று காலை ராமேசுவரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்துக்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசிய கமல்ஹாசன், பின்னர் மீனவர்களை சந்தித்து பேசினார். அதன்பிறகு ராமேசுவரத்தில் பேய்க்கரும்பு என்ற இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின், ராமநாதபுரத்துக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மதுரை திரும்பினார். மதுரை வரும் வழியில் பரமக்குடி, மானாமதுரையில் மக்களை சந்தித்தார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதில் கலந்துகொள்வதற்காக, கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அங்கு வந்து குவிந்து இருந்தனர்.

கமல்ஹாசன், காளவாசல் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கிருந்து மாலை 6.40 மணிக்கு ஒத்தக்கடை மைதானத்திற்கு காரில் புறப்பட்டார். அவருடைய நற்பணி இயக்கத்தினர் கார்களில் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

வழியில், அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு தங்கி இருந்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

பிறகு, ஒரே காரில் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் பொதுக்கூட்ட மைதானத்தை வந்து அடைந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

சரியாக 7.30 மணிக்கு மேடையின் முன்பு உள்ள கம்பத்தில் கமல்ஹாசன் தனது கட்சி கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்த கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதை சுற்றி 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்று உள்ளது.

கட்சி கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடைக்கு சென்ற கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் “மக்கள் நீதி மய்யம்” என்று அறிவித்தார். அப்போதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கட்சி கொடியில், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரும் இடம்பெற்று உள்ளது. கட்சியின் பெயரை அறிவித்து கமல்ஹாசன் பேசியதாவது:-

இது வாழ்க்கை முறை. இந்த சந்தோஷத்துடன் பெரும் பொறுப்பும் நமக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. இன்று இருக்கும் அரசியல் நிலவரத்துக்கு நீங்கள் எடுத்துக்காட்டாகவும், முன்னோடிகளாகவும் இருந்திட வேண்டும். அதற்கு அறிவுரை சொல்லும் தலைவர் அல்ல நான். அறிவுரை கேட்கும் தொண்டன்.

உங்களுக்கு நான் ஒன்றை அறிமுகம் செய்து வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன். என் தமிழ் தாய்க்குலத்துக்கும், என் சகோதர பெருந்தகைகளுக்கும் நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கையை உங்களுக்கு உதாரணம் ஆக்கி இருக்கிறேன். அதுதான் இது. இந்த சோற்று பருக்கையை தொட்டுப்பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள்.

விரல் சுடும். ஊழலில் தோய்ந்தே இருந்த உங்களின் விரல் சுடும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல் பல கூட்டங்கள் நிகழ இருக்கின்றன. இப்போது நல்லவர்களின் நட்பும், ஆசியும் நமக்கு கிடைத்து இருக்கிறது.

கட்சி பொறுப்பாளர்கள் இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேடையில், கமல்ஹாசன் அருகில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் சட்ட மந்திரியும், எம்.எல்.ஏ.யுமான சோம்நாத் பாரதி, விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அடுத்து, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா உள்பட 14 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் அறிவிக்கப்பட்டது.

பின்பு, கமல்ஹாசனின் புதிய கட்சியை வாழ்த்தி அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். இறுதியாக கமல்ஹாசன் நிறைவுரையாற்றினார். அப்போது மக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

Actor Kamal Haasan introduced the flag with a stroke of 6 hands with a star in the middle, declaring his party name 'People's Justice'.
{[['']]}

ஏப்ரல் 13-ல் வெளியாகிறது 'மெர்க்குரி': பிரபுதேவா நடிக்கும் வசனங்களே இல்லாத திரைப்படம்


பிரபுதேவா நடிப்பில் வசனங்களே இல்லாமல் உருவாகி வரும் 'மெர்க்குரி' திரைப்படம் ஏப்ரல் 13-ல் திரைக்கு வருகிறது. பிரபுதேவா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள 'மெர்க்குரி' போஸ்டரை பகிர்ந்துகொண்டுள்ளார்.

 போஸ்டரில், 'மெர்க்குரி' 13, ஏப்ரல் 2018 வெள்ளிக்கிழமையிலிருந்து உலகம் முழுவதும் உயர்கிறது என்று படம் வெளியாகும் தேதியையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 போஸ்டரை வெளியிட்டு, அதனுடன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'மெர்க்குரி' திரைப்படம் வெளியாகும் நாளை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த வசனமற்ற, த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஒரு நல்ல நேரம் அமைந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சனந்த், தீபக் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் தனது சொந்த பேனரான ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வெளியிடுகிறார்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து உள்ளார். தேசிய விருது பெற்ற திரு இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன் தமிழில் வசனங்களே இடம்பெறாமல் கமல் நடித்து 1987-ல் வெளிவந்த 'பேசும்படம்' திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
{[['']]}

கூகுள் தேடலில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய ப்ரியா பிரகாஷ் வாரியர்

கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார்.



மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் எகிறியது.

இந்நிலையில், தற்போது கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி ப்ரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார்.

அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் 3 மில்லியன் பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள், இன்ஸ்டாகிராம் என இணையத்தின் சென்சேஷனாகவே மாறிவிட்டார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.
{[['']]}

நடிகர் ரசிகையுடன் நடுரோட்டில் செல்பி – நடந்த கதி!

மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் வருண் தவான். இவர் காரில் பயணம் செய்யும் போது, தனது தலையை வெளியே நீட்டியபடி அருகில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு ரசிகையுடன் ‘செல்பி’ எடுத்து உள்ளார். இதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர் யாரோ படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் நடிகர் வருண் தவானை டுவிட்டரில் எச்சரித்து உள்ளது. 

அந்த பதிவில், இதுபோன்ற ஆபத்தான சாகசத்தை வெள்ளித்திரையில் செய்து கொள்ளுங்கள். சாலையில் வேண்டாம். இது உங்களுக்கும், ரசிகர்களுக்கும், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து. உங்கள் வீடு தேடி செல்லான் வந்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை போலீசின் இந்த டுவிட்டர் எச்சரிக்கையை தொடர்ந்து, நடிகர் வருண் தவான் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கார் இயக்கத்தில் இருக்கும் போது நான் ‘செல்பி’ எடுக்கவில்லை. சிக்னலில் நின்றபோது தான் எடுத்தேன். எனது ரசிகையின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தான் இப்படி நடந்து கொண்டேன். இனி இதுபோன்ற செயலுக்கு ஊக்கம் அளிக்க மாட்டேன். பாதுகாப்பை மனதில் வைத்து கொள்வேன்’ என தெரிவித்து உள்ளார்.

{[['']]}

நடிகை ஜோதிகா மீது வழக்கு!

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மகளிர் மட்டும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.

இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பது அப்படியே பீப் இல்லாமல் வெளி்யானது. இதனால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என கோவை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 294 பி சட்டப்பிரிவின் படியும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger