{[['']]}
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அனில் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் மும்பை கொண்டு வரப்படுகிறது உறவினரின் திருமண நிகழ்ச்சியின் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கேயே மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் நாளைதான் இந்தியா கொண்டு வரப்படும் என அவரது கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானி விமானத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான விமானம் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன விமானம் இந்திய தொழிலதிபர்கள் வரிசையில் டாப்பில் உள்ள அனில் அம்பானி, ரிலையன்ஸ் ட்ரான்ஸ்போர்ட் & ட்ராவல் லிமிட்டெட் நிறுவனத்தின் எம்பரர் 135BJ விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார்.
விமானம் புறப்பட்டது 13 இருக்கைகளை கொண்ட அந்த விமானத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த விமானம் இன்று பகல் 1.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது.
நாளை உடல் வருகை அனில் அம்பானியின் விமானத்தில் நாளை மும்பை கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment