Latest Movie :
Recent Movies
Showing posts with label Sri Lanka. Show all posts
Showing posts with label Sri Lanka. Show all posts

கண்டி கலவரத்தின் பின்னர் மக்களிடம் தடுமாறிய அமைச்சர்

கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலவரத்தினைத் தொடர்ந்து அங்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தடுமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதாக அறிந்த நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து,அக்குறணை 4ஆம் கட்டை பள்ளிவாசலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதில் பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூகபிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தற்போதைய பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தனர்.

எனினும்,இதன்போது பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்விகளின் மூலம் அமைச்சர் தடுமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

{[['']]}

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அமானுஷ்யம்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமானுஷ்யம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும், தங்களுடன் இணைந்து வர்த்தகம் செய்பவர்களும் எந்த இலாபமும் பெறுவதில்லை எனவும் பாரிய நட்டம் அடைந்துள்ளதாகவும் யாழ். சிறிய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக யாழ். மக்கள் ஒருவித அச்ச உணர்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக நிலையத்தில் வர்த்தகம் செய்தவர்களில் சிலர் மர்ம நோய் காரணமாக கடந்த 4 மாதங்களில் உயிரிழந்தனர். இதனால் இவர்களின் வீடுகளுக்கு தினமும் அமானுஷ்ய சக்தி வருவதாகவும், அமானுஷ்ய சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தில் ஆரம்பமான அமானுஷ்ய கதைகள் தற்போது யாழ்ப்பாணத்தின் சிறு பிரதேசம் வரை பரவியுள்ளது.
இந்த நிலைமைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இவ்வாறான அமானுஷ்ய சம்பங்கள் இடம்பெறுவதாக தெரிய வருகிறது.
கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கிரிஸ் பேய் பயம் போன்று தற்போது ஏற்பட்டுள்ள பயம் குறித்தும் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

{[['']]}

முல்லைத்தீவில் முன்னாள் போராளி உட்பட 10 பேர் கைது..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


நேற்று இரவு 11.50 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து உயரதிகாரிகளின் ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெடிமருந்துகள் மின்பிறப்பாக்கி மற்றும் பல உபகரணங்களையும் கைப்பற்றியதோடு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் கண்டி, நுவரெலிய, முல்லைத்தீவு, விஸ்வமடு, நிட்டம்புவ, வத்தேகம உள்ளிட்ட பகுதிகளை சேந்தவர்கள் எனவும் முன்னாள் போராளிகளும் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



{[['']]}

பெண்பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்படாவிடின் அப்பதவிகள் வர்த்தமானியில் வெற்றிடமாகவே அறிவிக்கப்படும்

வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். 

பெண்பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறித்த கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பெயர் பட்டியலின்படி வர்த்தமானி அறிவித்தலில் பெண் வேட்பாளர்களுக்கான பதவி வெற்றிடமாகவே  அறிவிக்கப்படுமென  மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டார். 

பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் கவனமற்ற செயற்பாடு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 

உள்ளுராட்சிமன்றங்களுக்கான பெண் பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடுவதில் கட்சிகள் தனது பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்தி வருகின்றன. சட்ட உறுப்புரைகளில் சகல கட்சிகளிலும் 25 சதவீத பெண் பிரதிநிதிதுவம் கட்டாயப்படுத்த வேண்டுமென வழலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சுயேட்சை குழுக்களும் இந்த 25 சதவீத பிரதிதிநிதுவத்துக்கு முக்கிய இடத்தினை கொடுக்க வேண்டும். 

பெண்பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்பிலும் அவசியம் தொடர்பிலும் சகல கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது. அவ்வாறு தேர்தல் ஆணைக்குழு கோரும் பெண்பிரதிநிகளின் எண்ணிக்கைக்கு இணங்க சகல கட்சிகளும் தனது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். கட்சிகள் அனைத்தும் சட்டம் தொடர்பில் சிந்தித்து செயற்படவேண்டும்.

பெருமளவிலான கட்சிகள் தனது கட்சிக்கான உறுப்பினர் பெயர்பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கான எண்ணிக்கைக்கு பெண் உறுப்பினரை தெரிவு செய்வதற்கு பதிலாக ஆண் உறுப்பினரின் பெயரை பட்டியலில் இணைக்கூடிய வாய்ப்புக்களும் எழுந்துள்ளன. அவ்வாறு பெண் பிரதிநிதிகளின் பெயருக்கு பதிலாக ஆண் உறுப்பினர் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டால் அவ் உறுப்பினர்கள் உள்ளுர்மன்றங்களில் சேவையாற்ற தகுதியற்றவர்களாகவே கருதப்படுவர். 

மேலும் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக ஆண் பிரதிநிதிகளின் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தால் தேர்தல் ஆணைக்குழு வெளியிடவுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறித்த பெண்பிரதிநிதிகளுக்கான பதவிகள் வெற்றிடமாகவே அறிக்கையிடப்படும். வர்த்தமானி அறிவித்தலை மீறி உள்ளுர் சபைகளில் குறித்த ஆண் பிரதிநிதிகள் பதவி வகிக்கமுடியாது என்றார். 


{[['']]}

பாலாவியில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் பாலாவி பகுதியில் இரும்பு பொருட்களை சேகரிக்கும் நிலையத்தில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரை அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

{[['']]}

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை. கனேடிய நாடாளுமன்றத்தில் உரை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை கனேடியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிரி ஆனந்த சங்கரி கனேடிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல் என்பன தொடர்பாக, ஹரி ஆனந்த சங்கரி கனேடிய நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபி றி லண்டின், கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையில் உரையாற்றியதை சுட்டிக்காட்டிய ஹரி ஆனந்த சங்கரி, பொறுக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்குப் பயணம் செய்தபோது, தமிழ்த் தாய்மார் பலரைச் சந்தித்து உரையாடியதாக கூறிய அவர், அந்த தய்மாரின் பிள்ளைகள், போரின் இறுதி வாரங்களில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார்.

சரணடைந்த தமது பிள்ளைகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த தாய்மாரும், ஏனைய குடும்ப உறுப்பினர்களும் தங்களது கேள்விகளுக்கான பதில்களையும், நடந்த உண்மைகளையும் அறிவதற்குமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹரி ஆனந்த சங்கரி கூட்டிக்காட்டினார்.

வடக்கிலும் கிழக்கிலும் பிரதான வீதியோரங்களில் தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கடந்த ஒரு வருட காலத்திற்கும் அதிகமாக கடும் வெய்யில், மற்றும் புழுதி என்பவற்றின் மத்தியில் அவர்கள் போராடுகிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்தத் தாய்மார் முன்வைத்த கோரிக்கை போன்ற மிகச் சிறிய கோரிக்கைகளுக்குக் கூட, இலங்கை அரசாங்கம் இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

உண்மையையும், நீதியையும் வேண்டி நிற்கும் இந்த மக்களின் கோரிக்கைகளை கனேடியர்களான நாம் புரிந்து கொள்கிறோம். இலங்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் வேண்டி நிற்போருக்கும், எமக்கு உந்துசக்தியாக விளங்கி, உத்வேகம் அளிக்கும் வீரமிக்க தாய்மாருக்கும் நாம் ஆதரவாக இருப்போம் என்றும் ஹரி ஆனந்த சங்கரி எடுத்துக் கூறினார்.


{[['']]}

ஊழ­லுக்கு எதி­ரான எனது நகர்வில் எவ்­வித மாற்­றமும் இல்லை


ஊழல் மோச­டிக்கு எதி­ரான எனது கொள்­கையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.   மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டங்­களை மோச­டிகள் இடம்­பெ­றாத வகையில் உரிய முறை­யிலும் வெளிப்­படைத் தன்­மை­யு­டனும் நடை­மு­றைப்­ப­டுத்­துவேன் என  ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பொலன்­ன­றுவை கிரித்­தலே குடி­யேற்­றத்தில் உள்ள கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில்   நேற்று   புதிய வகுப்­பறை கட்­டி­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி  இவ்வாறு தெரி­வித்தார்.


அவர் மேலும் கூறு­கையில். 

”எழுச்­சி­பெறும் பொலன்­ன­றுவை” மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் 06 மில்­லியன் ரூபா செலவில் இந்த புதிய வகுப்­பறை கட்­டிடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது   நாட்டின் விவ­சாய சமூ­கத்­திற்கு முன்­னைய எந்த அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத நிகழ்ச்சித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உலர் வல­யத்தில் 2400 குளங்­களை அபி­வி­ருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்­வ­ருடம் ஆரம்­பிக்­கப்­படும்.  

இதன் கீழ் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் மட்டும் 123 குளங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றது.  கடந்த  60 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மாவட்­டத்தில் உள்ள மக்கள் முகங்­கொ­டுத்த நீர் தொடர்­பான பிரச்­சி­னைகள் இவ்­வ­ருட இறு­திக்குள் நிரந்­த­ர­மாக தீர்த்­து­வைக்­கப்­படும். 

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள 240 பாட­சா­லை­களில் 142 பாட­சா­லை­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய வகுப்­பறைக் கட்­டி­டங்­களை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்­வு­க­ளுக்கு  தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  கல்­வித்­து­றைக்கு தேவை­யான வச­தி­களை வழங்­கு­வ­தைப்­போன்று பரீட்­சை­களில் மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும். 

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள பாட­சாலை மாண­வர்­களின் பரீட்சை பெறு­பே­று­களில் உள்ள பல­வீ­னங்­களை இனங்­கண்டு மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை பாட­சாலை அதி­பர்கள் மற்றும் கல்வி அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளேன். எவ்­வாறு இருப்­பினும் இந்த நாட்டில் ஊழல் இல்­லாத சமு­தாயம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். 

அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே நான் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். எனினும் ஊழல் குற்­றங்­களை ஒழிக்கும் எனது வேலைத்­­திட்­டங்­களை நான்  ஒரு­போதும் கைவி­டப்­போ­வ­தில்லை. ஊழல் மோசடிக்கு எதிரான எனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.   

மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் இடம்பெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத் துவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
{[['']]}

புதையல் தோண்டிய மூவர் வவுனியாவில் கைது : மூவர் தப்யோட்டம்



இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் சாம்பல்தோட்டம் பகுதியில் புதையில் தோண்டுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நெளுக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. எம். அத்தநாயக்கா தலைமையில் சென்ற குழுவினர் சாம்பல் தோட்டம் மைதானப்பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய மூவரைக்கைது செய்துள்ளதுடன் மேலும் அங்கிருந்த மூவர் தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய மூவரையும் பொலிசார் தேடிவருவருகின்றனர்.

புதையல் தோண்டுவதற்குப்பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கூமாங்குளம், நெளுக்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் மூவரும் 23 மற்றும் 32 வயதுடையவர்களெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 குறித்த மூவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
{[['']]}

த.தே.கூ வே எதிர்க்கட்சி, மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது ; துமிந்த திசாநாயக்க

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நீடிக்கின்றதாக தீர்மானம் எடுத்துள்ளோம். ஆகவே எதிர்க்கட்சி அந்தஸ்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நீடிக்கும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு  எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் மஹிந்த தரப்பினர் அங்கம் வகிப்பது பொருத்தமில்லாததாகும். அவர்களை தொடர்ந்தும் கட்சியுடன் வைத்திருப்பதா என்பது  குறித்து கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அழுத்தமாக கேள்வி எழுப்புவோம்  எனவும் குறிப்பிட்டது. 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் நீடிக்கும். இதில் எழுத்துமூல அறிக்கைகளை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இனியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்படுவது குறித்து எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாக பயணிப்பதாக தெரிவித்துள்ளனர். 

மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட சிலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் உள்ளனர்.  எனினும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


{[['']]}

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 
புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


{[['']]}

துரோகளின் கட்சியுடன் கூட்டு இல்லை என்கிறார் உத்தமர்!

உள்ளூராட்சி சபைகளில் அட்சி அமைப்பது தொடர்பாக ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், நேற்றையநாள் கொழும்பில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 40 சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த இரா.சம்பந்தன்
அதில் மக்கள் விரும்பியவாறு ஆட்சி நிர்வாகங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறிகாந்தா, மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


{[['']]}

முறை தவறிய தொடர்பு ..பல்கலை கழக மாணவன் மீது வாள் வெட்டு யாழில் சம்பவம்!!

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனொருவன் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த இரு பெண்பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்ததால், அப்பெண்ணின் கணவனே இவ்வாறு வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவனது சொந்த இடமான முல்லைத்தீவுக்கு அனுப்பியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை மாணவனை வெட்டியவரின் வீட்டிலேயே குறித்த பல்கலைக்கழக மாணவன் மதிய நேர மற்றும் இரவு நேர உணவைப் பெற்று வந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று மது போதையில் வந்த வீட்டுக்காரன் மாணவனை வெட்டியுள்ளார்.

அத்துடன் இக்குடும்பஸ்தரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது உடம்பில் கடுமையான அடிகாயங்கள் காணப்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

{[['']]}

சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க இலங்கைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் வெளியானது!!!

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பிலான ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு வரவழைக்கப்பட்டமை அவரது பாதுகாப்பினை கருத்திற் கொண்டே என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.


{[['']]}

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஆறு பேர் அடங்கிய குழு நியமனம்

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறியுள்ளார். 

இது தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் உள்ளடங்கிய ஆறு பேர் கொண்ட இராணுவ விசாரனைக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இவ்விடயம் தொடர்பான விபரக்கோவை இராணுவ விசாரனைக் குழுவினரால் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

இவ் விசாரனைக் குழுவில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகப் பிரிவின் அதிகாரியான பிரிகேடியர் இ.ஆர்.பி. வீரவர்தன, ஸ்நைபர் பயிற்றுவிப்பு மையத்தின் தளபதியான பிரிகேடியர் பி.எம்.எல். சந்திரசிறி, இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் பிரதானியான கேர்ணல் பி.பி.ஏ. பெரேரா, 7ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினல் கேர்ணல் எச்.டீ.ஜெ.வி. வீரதுங்க மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் அணு உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆய்வு அதிகாரியான மேஜர் என்.ஏ.பீ.எம்.எச். நிஷ்ஷங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த பஸ்ஸில் கைக்குண்டு ஒன்று வெடித்ததனாலேயே பஸ் தீப்பற்றி எரிந்ததாக இரசாயண பகுப்பாய்வு திணைக்களமும் உறுதி செய்திருந்தது. 

நேற்று முன்தினம் அதிகாலையில் தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 19 பேர் காயமடைந்திருந்தமை கூறத்தக்கது.


{[['']]}

உரக் கொள்வனவுக்கான நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு


அடுத்த போக ஆரம்பத்தின் போதே விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


தேவையான உரத்தின் சந்தைப் பெறுமதிக்கு சமனான முழுமையான நிதியையும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார். 


நெல், சோளம், சோயா, மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கே இந்த உர மானியம் வழங்கப்பட உள்ளது. 


விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் விஷேட திட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் தேசிய பொருளாதார சபையில் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். 


அதேவேளை அந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா பெறுமதியான இலவச காப்புறுதியும் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.


{[['']]}

நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 26ம் திகதி வரை குறித்த தடையை நீக்க கொழும்பு நீதவான் நீதிமண்றம் இன்று உத்தரவு பிறப்பித்ததாக எமது செய்தியாளர் கூறினார். 

15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவருக்கு வெளிநாட்டுப் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரஷ்யா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக அனுமதி கோரி அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றம் இந்த தடையுத்தரவை நீக்கியுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.


{[['']]}

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

றத்கம புகையிரத நிலையத்திற்கும் தொடந்துவ ரயில் நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த நபர் நேற்று (22) இரவு 11.05 மணியளவில் மருதானையில் இருந்தி காலி நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மரண பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ளதுடன் றத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


{[['']]}

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம்



பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது. 

இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் 2016.07.27 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் தங்களால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டுக் கடிதத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

மேற்கண்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பவற்றோடு அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி எம்மால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாத தன்மையைக் காணமுடிகின்றது. 

எனவே, பெப்ரவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்த குழுவின் விசேட சந்திப்பின்போது நீண்ட கலந்துரையாடலின் முடிவில் பின்வரும் முடிவு எடுக்கப்பட்டது. 

எவற்றுக்கும் முடிவு கிடைக்காத நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது. 
{[['']]}

தமிழ் மற்றும் இஸ்லாம் கலாச்சாரத்தை சீரழிக்கிறதா காதலர் தினம்!


உலகத்தில் பலவற்றுக்கும் பல தினங்களை ஒதுக்கி அன்றைய தினத்தில் குறித்த விடயம் தொடர்பாக

விழாக்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், எம்மில் அதிகம் பேர்கள் அவற்றுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை "காதலர் தினம் " என்ற கலாச்சாரம் சீரழிக்கப்படுகின்ற தினத்துக்கு கொடுப்பது மிகவும் கவலையான செய்தியாகும்.

#காதலர்_தினம் என்பது மேற்கத்தேய கலாசாரத்தின் சீரழிவுகளை இறக்குமதி செய்யும் ஒரு சேமிப்பு கூடம் என்று சொன்னால் மிகையாகாது.அதாவது, இன்னும் சொல்லப்போனால் ...

#காதலர்தினம்_மேற்கத்திய_உலகில்_சீரழிந்துபோன_கலாச்சாரத்தின்_சிந்தனையால்_உருவான_தினம் என்பதே உண்மை.

மேற்கத்தையே வாதிகள் தானும் கெட்டு அடுத்தவர்களையும் கெட்டுப்போகச் செய்வதற்காக பல சிந்தனைகளை சமூகத்தில் ஊடுருவச் செய்தனர் .அதில் முக்கியமான ஒன்றுதான் குடும்பங்களிலும்,சமூகங்களிலுமுள்ள கலாச்சார ஒழுக்க கட்டமைப்புக்களை சீர்குழைப்பதாகும்.அதற்காக,பெண்ணுரிமை என்ற கோசத்தை தூண்டிவிட்டு ,அதனூடாக பெண்களை சுய ஒழுக்க விழுமியங்களுக்கப்பால் சிந்திக்க கூடியளவுக்கு மூளைச் சலவை செய்து வீதிக்கு கொண்டுவருவதும் ,ஆண்பெண்கள் வேறுபாடின்றி இரண்டரக் கலப்பதாகும்.

இதன் மூலம் இளவயது ஆண்களும்,பெண்களும் தங்களது வெட்க உணர்வுகளை மறந்து தங்களுக்குள் காதல் என்ற பெயரில் அசிங்கமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.இவற்றுக்கு சமூகரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்காகவே "காதலர் தினம் " அறிமுகம் செய்யப்பட்டது.

*காதலர் தினத்தில் நடைபெறும் அசிங்கங்கள்

இரவு பணிரெண்டு மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர்சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகம்.

நாளொருவன்னம், பொழுதொரு மேனியாக ஆண் பெண் உறவு (காதலர் காதலி உறவு) மாறிக்கொண்டேயிருக்கும்.

”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி ”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது.

அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதலர் தினம்”!

கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை.

பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு!


இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு.

இதற்குப் பெயர்தான் காதலர் தினம் என்று பெயர் சூட்டி அழைக்கின்றனர்.



{[['']]}

167 சபைகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முடியாது!

340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும் சு.கவினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.   

எமது ஆதரவு இன்றி எந்தக் கட்சிக்கும் இந்த சபைகளில் ஆட்சியமைக்க முடியாது எனவும் எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இது வரை எந்த தரப்புடனும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.    

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,    ஐ.ம.சு.மு மற்றும் சு.க சார்பில் உரித்துடைய உறுப்பினர்கள் யார் யார் என்பது தொடர்பாக கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் பேசியே முடிவு செய்யப்படும். 

இதற்கு சில நாட்கள் பிடிக்கும்.    ஒரு கட்சிக்கு தனியாக ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் ஐ.ம.சு.மு மற்றும் சு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவான வழிகாட்டல்கள் வழங்க இருக்கிறோம். அதன்பிரகாரமே அவர்கள் செயற்படுவார்கள்.  

167 சபைகளில் ஐ.ம.சு.மு மற்றும் சு.க ஆதரவு இன்றி ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் எந்த கட்சியுடனும் உடன்பாடு காணப்படவில்லை என்றார்.    

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளில் பொதுஜன பெரமுன 231 சபைகளிலும் ஐ.தே.க 34 சபைகளிலும் வெற்றியீட்டின. இவற்றில் பாதி சபைகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் வேறு கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது 
{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger