{[['']]}
தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறியுள்ளார்.
இது தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் உள்ளடங்கிய ஆறு பேர் கொண்ட இராணுவ விசாரனைக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பான விபரக்கோவை இராணுவ விசாரனைக் குழுவினரால் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இவ் விசாரனைக் குழுவில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகப் பிரிவின் அதிகாரியான பிரிகேடியர் இ.ஆர்.பி. வீரவர்தன, ஸ்நைபர் பயிற்றுவிப்பு மையத்தின் தளபதியான பிரிகேடியர் பி.எம்.எல். சந்திரசிறி, இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் பிரதானியான கேர்ணல் பி.பி.ஏ. பெரேரா, 7ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினல் கேர்ணல் எச்.டீ.ஜெ.வி. வீரதுங்க மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் அணு உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆய்வு அதிகாரியான மேஜர் என்.ஏ.பீ.எம்.எச். நிஷ்ஷங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் கைக்குண்டு ஒன்று வெடித்ததனாலேயே பஸ் தீப்பற்றி எரிந்ததாக இரசாயண பகுப்பாய்வு திணைக்களமும் உறுதி செய்திருந்தது.
Post a Comment