Latest Movie :
Recent Movies
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

சிங்கம் அடைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்த வாலிபர்

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவை நேற்று ஏராளமான பார்வையாளர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது சிங்கம் அடைக்கப்பட்ட வேலியில் திடீரென ஒரு வாலிபர் ஏறி குதித்தார். அவரை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஓடி வந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் ஓடி வந்து சிங்கத்தின் கவனத்தை திசைதிருப்பி அந்த வாலிபரை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசாரிடம் பூங்கா ஊழியர்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் ஒட்டபாலம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 33) என தெரியவந்தது.

முருகனை காணவில்லை என அவருடைய பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்து இருந்தனர். இதனால் அவர் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்? சிங்கம் அடைக்கப்பட்ட வேலியில் ஏன் குதித்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Thiruvananthapuram,
Yesterday, a large number of visitors visited the biosphere park in Thiruvananthapuram. Suddenly a young boy jumped into a lonely fence. A female lion ran towards him.
Other visitors shocked by this shouted. As soon as the park staff ran, they drove the attention of the lion and saved the young man alive.
The park was handed over to the police by the park staff. He was found in Murugan (age 33) in Ottapalam area in the police investigation.
Her parents had been reported to police some days ago that Murugan was missing. So why did he leave home? Why did he jump in a lion The police are investigating.

{[['']]}

எல்லைக்கோடு அருகே பறந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்

இந்திய–பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்குள் இரு நாட்டு ஹெலிகாப்டர்களும் பறக்கக்கூடாது என்பது இரு நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட விதிமுறை ஆகும்.

ஜம்மு, 

 பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான மி–17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, இதை மீறும் வகையில், நேற்று காலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை பறந்து வந்தது. பின்னர் திரும்பிச் சென்றது. அதை இந்திய ராணுவம் பார்த்தது. ஆனால், இருதரப்பிலும் எத்தகைய தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


இந்திய வான்பகுதிக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் நுழையாவிட்டாலும், இது இரு நாடுகளுக்கிடையிலான உடன்பாட்டை மீறிய செயலாக கருதப்படுகிறது. இதுபற்றி பாகிஸ்தானிடம் முறையிடப்படும் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

Pakistan helicopter flew near the border line
{[['']]}

கமல்ஹாசனின் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’ மதுரையில் நடந்த விழாவில் அறிவித்தார்

நடுவில் நட்சத்திரத்துடன், 6 கைகள் கோர்த்த படத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார்.



மதுரையில் 21-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கப்போவதாக கூறிய அவர், இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கமல்ஹாசன் மதுரையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் சென்றார். ராமேசுவரத்தில் இருந்து, ‘நாளை நமதே’ என்ற பெயரில் நேற்று அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

நேற்று காலை ராமேசுவரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்துக்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசிய கமல்ஹாசன், பின்னர் மீனவர்களை சந்தித்து பேசினார். அதன்பிறகு ராமேசுவரத்தில் பேய்க்கரும்பு என்ற இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின், ராமநாதபுரத்துக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மதுரை திரும்பினார். மதுரை வரும் வழியில் பரமக்குடி, மானாமதுரையில் மக்களை சந்தித்தார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதில் கலந்துகொள்வதற்காக, கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அங்கு வந்து குவிந்து இருந்தனர்.

கமல்ஹாசன், காளவாசல் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கிருந்து மாலை 6.40 மணிக்கு ஒத்தக்கடை மைதானத்திற்கு காரில் புறப்பட்டார். அவருடைய நற்பணி இயக்கத்தினர் கார்களில் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

வழியில், அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு தங்கி இருந்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

பிறகு, ஒரே காரில் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் பொதுக்கூட்ட மைதானத்தை வந்து அடைந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

சரியாக 7.30 மணிக்கு மேடையின் முன்பு உள்ள கம்பத்தில் கமல்ஹாசன் தனது கட்சி கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்த கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதை சுற்றி 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்று உள்ளது.

கட்சி கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடைக்கு சென்ற கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் “மக்கள் நீதி மய்யம்” என்று அறிவித்தார். அப்போதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கட்சி கொடியில், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரும் இடம்பெற்று உள்ளது. கட்சியின் பெயரை அறிவித்து கமல்ஹாசன் பேசியதாவது:-

இது வாழ்க்கை முறை. இந்த சந்தோஷத்துடன் பெரும் பொறுப்பும் நமக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. இன்று இருக்கும் அரசியல் நிலவரத்துக்கு நீங்கள் எடுத்துக்காட்டாகவும், முன்னோடிகளாகவும் இருந்திட வேண்டும். அதற்கு அறிவுரை சொல்லும் தலைவர் அல்ல நான். அறிவுரை கேட்கும் தொண்டன்.

உங்களுக்கு நான் ஒன்றை அறிமுகம் செய்து வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன். என் தமிழ் தாய்க்குலத்துக்கும், என் சகோதர பெருந்தகைகளுக்கும் நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கையை உங்களுக்கு உதாரணம் ஆக்கி இருக்கிறேன். அதுதான் இது. இந்த சோற்று பருக்கையை தொட்டுப்பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள்.

விரல் சுடும். ஊழலில் தோய்ந்தே இருந்த உங்களின் விரல் சுடும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல் பல கூட்டங்கள் நிகழ இருக்கின்றன. இப்போது நல்லவர்களின் நட்பும், ஆசியும் நமக்கு கிடைத்து இருக்கிறது.

கட்சி பொறுப்பாளர்கள் இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேடையில், கமல்ஹாசன் அருகில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் சட்ட மந்திரியும், எம்.எல்.ஏ.யுமான சோம்நாத் பாரதி, விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அடுத்து, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா உள்பட 14 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் அறிவிக்கப்பட்டது.

பின்பு, கமல்ஹாசனின் புதிய கட்சியை வாழ்த்தி அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். இறுதியாக கமல்ஹாசன் நிறைவுரையாற்றினார். அப்போது மக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

Actor Kamal Haasan introduced the flag with a stroke of 6 hands with a star in the middle, declaring his party name 'People's Justice'.
{[['']]}

வனங்களை வளர்ப்பது மட்டுமல்ல; அழிக்காமல் காப்பதும் முக்கியம்!



புதிய வனங்களை வளர்ப்பதில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று அறிக்கை அளித்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம். செயற்கைக் கோள்கள் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, இந்திய நிலப்பரப்பில் 24.4% அளவுக்கு வனப் பகுதிகளாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, வனப்பரப்பும் மரங்கள் வளர்ப்பும் முந்தைய ஆண்டுகளைவிட 1% அதிகரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். அதேசமயம், புதிய வனங்களை வளர்ப்பதில் காட்டும் முனைப்பு, வனங்களை அழிப்பதைத் தடுப்பதிலும் அரசுக்கு இருக்க வேண்டும்.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33% வனங்களாக இருக்க வேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அதற்கேற்ப வன வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும், புதிதாக மரங்களை நட்டு வனப் பகுதியை அதிகரிப்பது, ஏற்கெனவே இருந்த பல்லுயிர்ப் பெருக்க இயற்கை வனங்களுக்கு ஈடாக முடியாது. அதே பரப்பளவுக்குப் புதிய மரங்களை நட்டு வனங்களை வளர்த்தாலும், பழைய வனங்கள் அளித்த நன்மைகள் கிடைத்துவிடாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கப்பல்களைக் கட்டவும் இதர பயன்பாட்டுக் காக வும் இந்திய வனங்களில் வளர்ந்த நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பெரிய - அரிய மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினர். அப்படி வெட்டப்பட்ட இடங்களில் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வும் பிற வணிகப் பயன்பாட்டுக்காகவும் புதிய மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் வளர்ந்தாலும் வனத்தின் பழைய வலிமையும் இயற்கைச் சமநிலையும் குறைந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காடுகள் வரம்பின்றி அழிக்கப்பட்டன. இதனாலும் நாட்டின் இயல்பான தட்ப - வெப்ப நிலை, மழைப் பொழிவு ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1,200 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பழைய காடுகள் அழிக்கப்பட்டிருப்பது மர - வனத் தணிக்கையின்போது தெரிந்துள்ளது. வட கிழக்கு மாநிலப்பகுதி என்பது மலையும் வனங்களும் நிரம்பிய, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உறைவிடமான பகுதி. அங்கு ஏற்பட்டுள்ள வன இழப்பானது வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஒடிஷா, அசாம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வனப்பகுதியை அதிகப்படுத்தியிருந்தாலும் வட கிழக்கில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்ய முடியாது.

வனங்களை வளர்ப்பதில் இந்தியா புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரே வகை மரக் கன்றுகளையே எல்லா இடங்களிலும் நடக் கூடாது. பாரம்பரியமாக வனங்கள் இருந்த பகுதியில் விளைந்த மரங்களையும் தாவரங்களையும் மீண்டும் நட்டுப் பராமரிக்க வேண்டும். 3 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள திறந்தவெளிக் காடுகளில் 10% முதல் 40% வரையிலான இடத்தில்தான் மரங்கள் உள்ளன என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மிகுந்த கவலை தரும் விஷயம் இது. வனப் பகுதிகளில் திறந்தவெளி கனிமச் சுரங்கங்களுக்கு அரசு அனுமதி தரவே கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் வன வளர்ப்பில் உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். அப்போதுதான் வரும் தலைமுறைக்கு வளமான சுற்றுச்சூழலை நாம் விட்டுச்செல்ல முடியும்!
{[['']]}

167 சபைகளில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முடியாது!

340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும் சு.கவினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.   

எமது ஆதரவு இன்றி எந்தக் கட்சிக்கும் இந்த சபைகளில் ஆட்சியமைக்க முடியாது எனவும் எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இது வரை எந்த தரப்புடனும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.    

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,    ஐ.ம.சு.மு மற்றும் சு.க சார்பில் உரித்துடைய உறுப்பினர்கள் யார் யார் என்பது தொடர்பாக கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் பேசியே முடிவு செய்யப்படும். 

இதற்கு சில நாட்கள் பிடிக்கும்.    ஒரு கட்சிக்கு தனியாக ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் ஐ.ம.சு.மு மற்றும் சு.க மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவான வழிகாட்டல்கள் வழங்க இருக்கிறோம். அதன்பிரகாரமே அவர்கள் செயற்படுவார்கள்.  

167 சபைகளில் ஐ.ம.சு.மு மற்றும் சு.க ஆதரவு இன்றி ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் எந்த கட்சியுடனும் உடன்பாடு காணப்படவில்லை என்றார்.    

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளில் பொதுஜன பெரமுன 231 சபைகளிலும் ஐ.தே.க 34 சபைகளிலும் வெற்றியீட்டின. இவற்றில் பாதி சபைகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் வேறு கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது 
{[['']]}

காதலர் தினத்தில் இலங்கையில் மலர்ந்துள்ள ஆபத்து!

உலகளாவிய ரீதியில் இன்று தினம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.  பெப்ரவரி மாதத்தில் வெலன்டைன் எனப்படும் மலர்கள் மலரும் காலமாகும்.  

இந்த மலர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியாக காணப்பட்டாலும் புற்றுநோயயை ஏற்படுத்தும் ஆபத்தான மலர் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  

இலங்கையில் இந்த மரங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.  எனினும் இதன் ஆபத்தான நிலைமையை அறியாமல் சிலர் இன்னமும் இந்த மரத்தை பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.  

இந்நிலையில் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இந்த வெலன்டைன் மரத்தின் மலர்கள் பெருமளவு மலர்த்துள்ளன.  இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.






{[['']]}

தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலை மைத்துவம் எம்மிடமே உள்ளது - இரா.சம்பந்தன் இவன் இன்னுமா சாகல?



தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலை மைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட் டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும்  தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு  உரையாற்றுகையி லேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இம்முறை தேர்தல் சாதாரண தேர்தலை யும் விட விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள தேர்தலாக கருதப்படுகின்றது.

இதில் மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்க த்தில் செயற்பட்டு வருகின்றார். இந்த தேர்த லில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. என்றா லும் அதற்கான ஆரம்பமாக இது அமையும். ஆகவே இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமானதாக அமைய வுள்ளது.

இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் அர சியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றப் பட வேண்டும். அதற்கான நகர்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆகவே இவை அனைத்தையும் ஏற் படுத்த உந்துதலாக அமையப்போவது  தமிழ் மக்களின் தீர் ப்புத்தான். எனவே, உள்நாட்டிலும் சர்வ தேச ரீதியிலும் ஏற்ப ட்டுள்ள நிலைமை களை அறிந்து தமிழ் மக்கள் தமது கடமை களை சரியாக செய்ய வேண்டும் என்றார்.
{[['']]}

யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளின் எழுச்சி கீதங்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

கைலாசபதி மண்டபத்திற்கு முன்னால் கேக் வெட்டி, மாணவர்களுக்கும் கேக் கொடுத்து பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.

அத்துடன், தமிழீழத்தின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் புலிகளின் எழுச்சி கீதங்களும் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
மேலும், எவ்விதமான அச்சுறுத்தல்களும் இன்றி மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடுவதாக அறியக்கிடைத்து .


{[['']]}

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வரும் மக்கள்



மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. 

இதன்படி, அண்மைக் காலங்களாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்கமைய, வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை மையப்படுத்து இடம்பெறவுள்ளது. 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அருகிலும், இதுபோன்று நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 

வடக்கின் பிரதான மாவீரர் தின நிகழ்வு தமிழ் இளைஞர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

கனகபுரம் மாவீரர் நிகழ்வுகள் கிளிநொச்சி இளைஞர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.





{[['']]}

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட 26 பேர் கைது



சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படும் 26 பேர் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

புத்தளம் பகுதியிலுள்ள இடமொன்றில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட ஆண்கள் தவிர்த்து பெண்களும் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளனரா? அவ்வாறாயின் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது எங்கு என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
{[['']]}

ஏ.ரீ.எம் இயந்திரத்தில் பணம் திருடும் திருடர்கள்; தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்

ஏ.ரீ.எம் அட்டைகளின் தரவுகளை திருடி நீதிக்கு புறம்பான முறையில் பணம் பெற்றுக் கொண்ட இரண்டு பேரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 



இரண்டு சந்தேகநபர்களும் சுமார் 03 இலட்சம் ரூபா வரை ஏ.ரீ.எம் அட்டைகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இவர்கள் இருவரும் இவ்வாறு பணம் பெற்றுக் கொள்ளும் காட்சி இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் அக்குறனை ஆகிய பிரதேசங்களில் உள்ள ஏ.ரீ.எம் இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளன. 

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 011-2326670, 011-2320141, 011-2320145 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
{[['']]}

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

தேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும்பொருட்டு, வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது.

பிரதேச மக்கள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் இளைஞர்களின் முன்னெடுப்பில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி அரசியல் கட்சிகளில் தலையீடுகள் இன்றி உறவுகளின் உணர்வுபூர்வ நிகழ்வாக இடம்பெறும் இந்நிகழ்வில் அனைவரையும் அஞ்சலி செலுத்த ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லமானது, வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மகாவித்தியாலயத்துக்கு அருகில் கடந்த 2002ஆம் ஆம் ஆண்டு மாவீரர் சிலம்பரசனது நினைவுக் கல் திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த துயிலுமில்லத்தில் 500 வரையான  மாவீரர்களின் நினைவுக்கற்கள் மற்றும் வித்துடல்கள் விதைக்கப்பட்டு அன்றிலிருந்து தொடர்ச்சியாக வருடாவருடம்  மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்று 2008 ஆம் ஆண்டில் இறுதியாக மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டது.

இறுதியாக 2008 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வோடு யுத்த சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீள்குடியேறியபோதும்  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் இவ்வாண்டு மக்கள் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





{[['']]}

யாழில் துவிச்சக்கரவண்டித் திருடர்களுக்கு நேர்ந்த கதி!

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக நிறுத்தப்படும் துவிச்சக்கர வண்டிகளை களவாடிய சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.



போதனா வைத்திய சாலைக்கு முன்பாக விடப்படும் துவிச்சகர வண்டிகள் தொடர்ந்து ஒரு மர்மக் குழுவினால் திருடப்பட்டு வந்துள்ளன. அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை துவிச்சக்கர வண்டிகளை திருட முற்பட்ட இருவரை அங்கு நின்றவர்கள் கையும் மெய்யுமாகப் பிடித்தனர்.

அவர்கள் இருவரையும் யாழ்ப்பாணப் பொலிசாரிடம் அங்கிருந்தவர்கள் ஒப்படைத்தனர். அந்தச் சம்பவம் நடைபெற்று சில மணிநேரத்தில் வேறு இருவர் போதனா வைத்திய சாலை முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த துவிச்சக்கர வண்டியை திருட முற்பட்ட வேளை, அங்கு நின்ற வாடகை உந்து (taxi) ஓட்டுநர்கள் அதனை அவதானித்து திருடர்களை துரத்திச் சென்று பிடித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். யாழ்.பொலிஸ் நிலையத்தில் குறித்த நான்கு சந்தேக நபர்களையும் தாம் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
{[['']]}

மாணவி வித்தியா இன்று புங்குடுதீவில் நினைவுகூரப்பட்டார்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் 21ஆவது பிறந்த தினமான இன்றைய நாள், குறித்த மாணவியின் மரணத்திற்கான நினைவஞ்சலியும், விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மாணவி வித்தியா கல்வி கற்ற பாடசாலையான புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு, முன்னாள் நடிகையான சுகினிதா வீரசிங்க மற்றும் அவரது கணவரான களனி பல்கலைகழக விரிவுரையாளர் நந்தலால் மலான்கொட ஆகியோரால் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.நாட்டில் இனி எங்கும் வித்தியாவுக்கு இடம்பெற்றது போன்றதான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற விழிப்புணர்வாகவும், அவரது மரணத்திற்கான அஞ்சலி நிகழ்வாகவுமே வித்தியாவின் 21ஆவது பிறந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




இதன்போது வித்தியாவின் உருவப்படத்திற்கு, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்துவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து  வித்தியா நினைவாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நடிகை மற்றும் விரிவுரையாளர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் மற்றும் வதனி சங்கர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் 284 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், சீருடைகளும் வழங்கப்பட்டதுடன் ஒன்பது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

{[['']]}

கிளிநொச்சியில் களைகட்டும் தமிழீழ தேசிய மாவீரர் நாள்!

தமிழீழ தேசிய மாவீரர்நாள் எதிர்வரும் 27.11.2017 கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் மாவீரர் நாளுக்கான புணரமைப்பு பணிகள் நேற்று (24.11.2017) ஆரம்பிக்கப்பட்டது.

வீதி புனரமைப்பு,  கொடிகம்பம் நாட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதகதியில் நடைபெற்றது 

அவ் வேளையில், அவர்களை அச்சமூட்டும் வகையில் பொலிஸார் அங்கே அதிக அளவில் பிரசன்னமாகி  புகைப்படம் எடுத்தனர்.

எனினும் அவர்களை அசட்டை செய்து விட்டு இளைஞர்கள் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.


































{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger