{[['']]}
இந்திய–பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்குள் இரு நாட்டு ஹெலிகாப்டர்களும் பறக்கக்கூடாது என்பது இரு நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட விதிமுறை ஆகும்.
ஜம்மு,
பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான மி–17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, இதை மீறும் வகையில், நேற்று காலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை பறந்து வந்தது. பின்னர் திரும்பிச் சென்றது. அதை இந்திய ராணுவம் பார்த்தது. ஆனால், இருதரப்பிலும் எத்தகைய தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய வான்பகுதிக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் நுழையாவிட்டாலும், இது இரு நாடுகளுக்கிடையிலான உடன்பாட்டை மீறிய செயலாக கருதப்படுகிறது. இதுபற்றி பாகிஸ்தானிடம் முறையிடப்படும் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
Pakistan helicopter flew near the border line
Post a Comment