{[['']]}
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் 21ஆவது பிறந்த தினமான இன்றைய நாள், குறித்த மாணவியின் மரணத்திற்கான நினைவஞ்சலியும், விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மாணவி வித்தியா கல்வி கற்ற பாடசாலையான புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு, முன்னாள் நடிகையான சுகினிதா வீரசிங்க மற்றும் அவரது கணவரான களனி பல்கலைகழக விரிவுரையாளர் நந்தலால் மலான்கொட ஆகியோரால் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.நாட்டில் இனி எங்கும் வித்தியாவுக்கு இடம்பெற்றது போன்றதான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற விழிப்புணர்வாகவும், அவரது மரணத்திற்கான அஞ்சலி நிகழ்வாகவுமே வித்தியாவின் 21ஆவது பிறந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது வித்தியாவின் உருவப்படத்திற்கு, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்துவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து வித்தியா நினைவாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நடிகை மற்றும் விரிவுரையாளர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் மற்றும் வதனி சங்கர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் 284 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், சீருடைகளும் வழங்கப்பட்டதுடன் ஒன்பது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment