{[['']]}
தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலை மைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட் டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையி லேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இம்முறை தேர்தல் சாதாரண தேர்தலை யும் விட விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள தேர்தலாக கருதப்படுகின்றது.
இதில் மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்க த்தில் செயற்பட்டு வருகின்றார். இந்த தேர்த லில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. என்றா லும் அதற்கான ஆரம்பமாக இது அமையும். ஆகவே இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமானதாக அமைய வுள்ளது.
இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் அர சியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றப் பட வேண்டும். அதற்கான நகர்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆகவே இவை அனைத்தையும் ஏற் படுத்த உந்துதலாக அமையப்போவது தமிழ் மக்களின் தீர் ப்புத்தான். எனவே, உள்நாட்டிலும் சர்வ தேச ரீதியிலும் ஏற்ப ட்டுள்ள நிலைமை களை அறிந்து தமிழ் மக்கள் தமது கடமை களை சரியாக செய்ய வேண்டும் என்றார்.
Post a Comment