{[['']]}
உள்ளூராட்சி சபைகளில் அட்சி அமைப்பது தொடர்பாக ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், நேற்றையநாள் கொழும்பில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 40 சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த இரா.சம்பந்தன்
அதில் மக்கள் விரும்பியவாறு ஆட்சி நிர்வாகங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறிகாந்தா, மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment