{[['']]}
‘லெஜண்ட்’ ஸ்ரீதேவி மறைவையடுத்து திரைத்துறை மற்றும் அனைத்துத் துறையைச் சேர்ந்த பிரபலங்கலும் அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “இந்தத் துயரச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. நாட்டின் முதல் நடிகை சூப்பர்ஸ்டார். 54 வயதில் 50 வருடம் திரைத்துறையில் அபாரமான நடிப்புத்திறன். என்னதொரு பயணம். எதிர்பாராத முடிவு. ஸ்ரீதேவி குரு உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகை என்று தனது இரங்கல் செய்தியில் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது. அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா அமைதி அடையட்டும் என நடிகை திரிஷா ட்வீட் செய்துள்ளார்.
ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டது. இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என நடிகை பிரீத்தி ஜிந்தா ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம் என நடிகை பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை என நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேஹா தூபியா, நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
நடிகை ராதிகா சரத்குமார்: ஸ்ரீதேவி கபூர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது, இன்னமும் நம்ப முடியவில்லை. அவருடன் இணைந்து நடித்துள்ளேன் என்னால் நம்ப முடியவில்லை.
ஷேகர் கபூர்: ஒரு பெரிய காலக்கட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு அழகான கதை முடிவுக்கு வந்துள்ளது, ஒரு அபாரமான ஸ்பிரிட் நம்மை நேசத்துடன் விட்டுப் பிரிந்தது.
சுஷ்மிதா சென்: மிகப்பெரிய மாரடைப்பினால் மேடம் ஸ்ரீதேவி மரணம் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.
குஷ்பூ சுந்தர்: துயரமான செய்தியுடன் எழுந்தேன். ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை. அதிகபட்ச திறமை, அதி அழகு, வார்த்தைகளால் துயரத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவரது குழந்தைச் சிரிப்பு இனி பார்க்க முடியாதது.
மாதவன்: திரைத்துறை மீண்டும் அதே நிலைமையில் இனி இருக்காது அவரது மறைவு எனக்கு கடும் அதிர்ச்சியளிக்கிறது, அவரது குடும்பத்தினர் என்னமாதிரியான துயரத்தில் இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
ஸ்ரீதேவி மரணம் மாரடைப்பு துபாய் இயக்குநர் ராஜமவுலி சினிமா தமிழ்சினிமா கவுதமி குஷ்பு sridevi Death Tamil Cinema Rajamouli
Post a Comment