{[['']]}
சிரியாவின் கிழக்கு குவாத்தா நகரில் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கி இதுவரை 674 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் தொடரும் போர்- இதுவரை 674 பேர் பலி, இன்னும் அதிகரிக்கலாமென கவலை
சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பகுதிகளில் பல பகுதிகள் தற்போது, சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் ஒரே ஒரு பகுதியாக கிழக்கு குவாத்தா நகர் காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவம் முன்னெடுத்து வருகிறது. கடந்த 13 நாட்களாக யுத்த நிறுத்தங்கள் போன்ற அறிவிப்புக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருவதினால், அங்கு சிக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேசம் அமைதிகாத்து வருவதாக அந்நாட்டு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment