{[['']]}
தொலைத்து ஓர் இறைமை கொண்டவரே ,
தமிழுக்கும் ,தமிழர்க்கும் பகை சூழ்ந்த வேளை -
உம் பெயர் சொல்லிப் பதற செய்தவரே ;
உம் வாழ் நாள் எல்லாம் காட்டினிலே! ஒழித்து
வைத்து எமை காவல் செய்தவரே !
தளபதியாய் தாம் நின்று -, முப்படை
கட்டி ஐ நிலம் காத்தவரே
நீர் ஆண்ட முப் பொழுதில் -நாங்கள்
எல்லாம் நின்மதியாய்!
நீர் அகண்ட இப் பொழுதில் – நாங்கள்
எல்லாம் அடிமைகளாய்!
அடிமைகளாய் யாம் இருக்க !!!-அரச மர
சாத்தான்களும் , ஆள மர எச்சங்களும்
எங்கள் இடை வீழ்கையிலே !யார்
பெயரை நாம் உரைப்போம்
அண்ணா !!!,அண்ணா !! -முப்
பொழுதில் விரைவினிலே ,
உந்தன் பெயர் சொல்லி நாம்
எழுவோம் இந்த இனம் இருக்கும் வரை
உந்தன் பெயரை இறை மையாய்
நாம் பெறுவோம் உந்தன்
ஒவ்வொரு பிறப்பினுள்ளும்
அடிமை இல்லை இத்தரையில் ,
எனச் சொல்லி நாம் எழுவோம் :
வாழ்த்துக்களோடு வணங்குகின்றோம்
உம் அகவை உயர!
Post a Comment