{[['']]}
மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவ சிகிச்சைகள் செய்வது போல, தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மனிதர்களுக்கும் தலைமாற்று அறுவைச் சிகிச்சை !
பிணத்துக்கு மேற்கொள்ளப்பட்ட தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதே தொழிநுட்பத்துடன், உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் செர்ஜியோ கனோவெரா தெரிவித்தார்.
மனிதர்களுக்கும் தலைமாற்று அறுவைச் சிகிச்சை !
இது, முதன் முறையாக நடக்கப்போகும் தலைமாற்று அறுவை சிகிச்சை எனத் தெரிவிக்கப்பட்டு, இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.
வைத்தியர் செர்ஜியோ கனாவெரோ தலைமையிலான குழுவினர், தற்போது ஒரு பிணத்துக்கு தலைமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
புது விதமான தொழில்நுட்பத்தைப் பின்பற்றி, சுமார் 18 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
தண்டுவடம், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழிநுட்பத்துடன் தலையுடன் பொருத்தப்பட்டு, இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எனவே இதே தொழிநுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment