{[['']]}
பிரையன் ஜோன்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain Chip - Micro) உருவாக்கி வருகின்றது.
இந்த சிப்களை பொருத்துவதன் மூலம் எமக்குத் தேவையான நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் முடியும் என்பதோடு இந்த சிப் அனைவரும் வாங்கக்கூடியதாக இருக்கும் என பிரையன் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இதன் வளர்ச்சி இன்னும் 15 ஆண்டுகளில் பூர்த்தியடையும் எனவும், இதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இது பற்றி ஜோன்சன் கருத்து தெரிவிக்கையில், இந்த கருவி மருத்துவ பயன்பாட்டை அடுத்த படி முன்னோக்கி கொண்டு செல்வதோடு அல்சைமர் (Alzheimer) போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு உருதுணையாக நிற்கும்” எனவும் நம்பிக்கை கூறியுள்ளார்.
Post a Comment