{[['']]}
சிரியப் போரால் அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளுக்கு, உதவிப்பொருட்களை வழங்குபவர்கள் பெண்களிடம் பாலியல் ஆதாயம்பெற முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஏழாண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் சிரியப் போர், கடந்த சில மாதங்களாகத் தீவிரமடைந்துள்ளது. போரில், ஆயிரக்கணக்கான பேர் பலியாகிவருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சி மனதை உறையச்செய்வதாக இருக்கிறது.
இந்நிலையில் ஐ.நா.வின் ‘வாய்ஸஸ் ஃபரம் 2018’ அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இடம்பெயர்ந்து அகதிகளாகத் தங்கியுள்ள சிரியப் பெண்களுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து செல்லும் உணவு மற்றும் சோப்பு, ஆடைபோன்ற உதவிப் பொருட்களை பல்வேறு லாபநோக்கமற்ற சர்வதேச அமைப்புகள் வழங்கிவருகின்றன.
உதவி வழங்கும் அமைப்புகள் மணமான, மணமாகாத சிரியப் பெண்களின் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைக்கின்றனர். சில இடங்களில் லிஃப்ட் கொடுத்து வீட்டுக்கு அழைத்துச்சென்று செக்ஸுக்குப் பின் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2015-லேயே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை பிபிசியும் உறுதிசெய்தது.
போரில் ஈடுபடும் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபடுவதும், சர்ச்சைக்குள்ளாவதும் வாடிக்கை. மாறாக, அவர்களுக்கு உதவிசெய்யப் போகிற சர்வதேசத் தொண்டு நிறுவன உறுப்பினர்களே இத்தகைய அத்துமீறலில் ஈடுபடுவதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துவருகின்றன.
Post a Comment