{[['']]}
'சிரியா மண்ணே சிரி' என்ற தலைப்பில் அந்நாட்டில் நடக்கும் அவலங்கள் பற்றிய கவிதையை வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நேரடியாக போரில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ரஷ்யா தடுத்து வருகிறது என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் பலரும் சிரியாவில் நடக்கும் போரை நிறுத்தக் கோரி அங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிரியாவில் நடக்கும் போர் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
'சிரியா மண்ணே சிரி' என்ற தொடங்கும் அவ்வீடியோ இதோ...
Post a Comment