ரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எதிர்த்து போட்டியிடவுள்ளளார் சகோதரி அய்னா கம்ஸ்டோவா, ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்
ரஷ்யாவின் பிரபல முப்தியான அஹ்மத் அப்துல்லாவை திருமணம் செய்துள்ள 46 வயதான அய்னா கம்ஸடோவா, அந்நாட்டின் முன்னணி ஊடகவியலாளராவார்.
islam.ru எனும் இணையதளத்தின் ஆசிரியரான இவர் பல நூல்களையும் எழுதி வெளி யிட்டுள்ளார். அத்துடன் சமூக நலப் பணிகளை முன்னெடுக்கும் கொடை வள்ளலுமாவார்
ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் சார்பில் போட்டியிடும் ஒருவர் 1 இலட்சம் மக்களின் கையொப்பத்தை தனக்கு ஆதரவாக சேகரித்து வழங்க வேண்டும்.
ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி, பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம்!
ஆனால் அய்னாவுக்கு இதுவரை சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டு நாடெங்கிலுமிருந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அய்னா தோல்வியடைந்தாலும் கூ ஹிஜாப் அணிந்த பெண்கள் வெறுமனே ஒரு தாயோ அல்லது ஒரு பெண்ணோ மாத்திரமன்றி நன்றாக கல்வி கற்றவர் களும் மதிப்புக்குரியவர்களும்தான் எனும் செய்தியை முழு உலகுக்கும் சொல்ல இது நல்ல சந்தர்ப்பம் என்று ரஷ்ய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
Post a Comment