ஒரு பெண் சரியாக இருந்தால் வீடும் சரியாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. பெண் சரியாக இருப்பது என்றால் என்ன? வாழ்க்கை என்ற தேரை சரியான பாதையில் செலுத்துபவள் பெண்தான். வீடு தூய்மையாக இருக்கவேண்டும். வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். மிதமான செலவுகளால் அன்றாட வீட்டு நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ளவேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே ஒரு பெண் குடும்பத்தை வழிநடத்தி செல்லமுடியும். பெண்கள் வேலைக்கு சென்றால் அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறிவிடும். வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என்ற வேறுபாடு உண்டாகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகம், வீடு என 2 பொறுப்புகளையும் கவனிக்கவேண்டிய கட்டாயம் எற்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களின் வேலை எளிய வேலையாக கருதப்படுகிறது. வேறு எந்த தொந்தரவும் இல்லை. உரிய சம்பளமும் இல்லை. சம்பளம் மற்றும் பிரதி பலனும் அவசியம் இல்லாதது. காலகாலமாக பெண்கள் வீட்டு வேலைகளை தங்கள் கடமை என்று எந்த கைமாறையும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார்கள். வீட்டு வேலைகள்ஒவ்வொரு வேலைக்கும் அட்டவணை தயாரித்து கொள்ளுங்கள். காலை 9 மணிக்கு விட்டில் உள்ள அனைவரையும் அனுப்பிய பின்னர் ஓய்வு.
காலையில் எழுந்து சப்பாத்தி மாவு தயார் செய்ய தாமதமாகும் அது போன்ற சமயங்களில் முந்தைய நாள் இரவே மாவை தயார் செய்து கொள்ளவேண்டும். காலை 6 மணி முதல் 9 மணிவரை குடும்ப தலைவிகளுக்கு மிக முக்கியமான நேரமாகும். இடுப்பு நொடிந்து வேலை பார்க்கிறாள் என்று சொல்வார்களே இந்த நேரத்தில் தான் பெண் கடினமாக வீட்டில் உள்ளவர்களுக்காக உழைக்கிறாள். ஓவியம் வரைவது, நடனம், சங்கீதம், விளையாட்டு, படிப்பது போன்ற மனதை உற்சாகமாக வைத்திருக்கும் நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டின் வளாகத்தில் அமைத்திருக்கும் தோட்டம் வீட்டின் அழகை வெளிச்சம் போட்டு காட்டும். தோட்டத்தில் பலவித பூச்செடிகளை உருவாக்குவது, அதில் களை எடுப்பது, செடிகளுக்கு தண்ணீர் போன்றவை நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் நிலம் இல்லை என்றாலும், அல்லது நீங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தாலும் சிலரது வீட்டின் வாசல் முன்பு காலியிடம் இருக்கும். அதில் பூச்செடிகளை வளர்க்கலாம். நீங்கள் வாடகை வீட்டில் வசித்தாலும். அடுத்தவர்கள் வீட்டில் எதற்கு நாம் பூச்செடி வளர்க்கவேண்டும் என்று எண்ண வேண்டாம். பூந்தோட்டமாகட்டும், செடி கொடிகளாகட்டும். அது எதுவாக இருந்தாலும் இயற்கை சம்மந்தப்பட்டது. இயற்கையை வளர்ப்பதில் அதிருப்தி கொள்ளவேண்டாம். அது மனதுக்கும் உற்சாகத்தையும், நிம்மதியையும் தரும்.
வீட்டின் முன்னால் உள்ள அலங்கார பொருட்களை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யுங்கள். சோபா செட்டை ஒரே திசையில் வைத்து இருக்க வேண்டும் அவசியம் இல்லை. ஒரே திசையில் இருந்தால் உங்களுக்கே போரடிக்கும். டி.வி. இருக்கும் இடத்தையும் வாரத்திற்கு ஒருமுறை மாற்றி அமையுங்கள் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சிக்கனமான செலவு குடும்ப தலைவிகளுக்கு அவசியம். ஆண்கள் வீட்டிற்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்பார்கள். அதை வாங்கவேண்டாம் என்று கணவனுக்கு ஆலோசனை வழங்கலாம். தேவையில்லாத செலவு பெண்களின் கையில் பணம் இருக்கும் போது அளவுக்கு அதிகமான காய் கறிகளை வாங்கி குவிப்பார்கள். அல்லது சேலை வாங்கி பீரோவில் அடுக்கிவைத்து அழகு பார்ப்பார்கள். அது அந்த மாதம் முழுவதும் வரும் வருமானம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் இருக்காது. வீட்டில் வாங்கிவைக்கும் காய்கறிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அதை பயன்படுத்தா விட்டால் அழுகி போய்விடும் அல்லவா? பிரிட்ஜில் வைத்தாலும் ருசி இருக்காது. அதனால் நீங்களே பையை எடுத்துக்கொண்டு மார்க்கெட் செல்லுங்கள். கணவனிடம் செலவுக்கு வாங்கிய பணத்தில் ஒரு பகுதியை சேமித்த வங்கியின் சேமிப்பு கணக்கில் கட்டி வாருங்கள். வீட்டிற்கு தேவையானது என்றால் அதை கணவரிடம் சொல்லாமல் செய்வதில் தவறில்லை.
ஏனென்றால் நீங்கள் பணம் சேமித்த விஷயம் கணவருக்கு தெரிந்தால் அதை அவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான செலவுகளுக்கு பயன்படுத்த கூடும். இதனால் அவசர காலத்துக்கு என்று சேமித்த பணம் உதவாமலே போய்விடும். தேவையில்லாமல் நகை, சேலைகளை வாங்க கூடாது என்று குடும்ப தலைவிகளுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. வீட்டில் சுப காரியம் நடக்கும்போது மட்டுமே விலை உயர்ந்த சேலைகளை பயன்படுத்த முடியும். இதனால் சேலைகளை வாங்குவது என்பது தேவையில்லாத செலவாகி விடும். உண்மையை சொல்லவேண்டும் என்றால் தொட்டிலை ஆட்டும் கைகள்தான் முழு வீட்டை காக்கும் சக்தி கொண்டவை. இந்த நாட்டையும் வல்லரசாக்கும் வல்லமை கொண்ட முழு சக்தியும் பெண்களிடம் தான் உள்ளது. அரை மணி நேரம் அவள் ஓய்வெடுத்தால். தொட்டிலும் நின்று விடும். வீடும் ஸ்தம்பித்துவிடும். அது எப்போது என்றால் அவள் ஒன்றிரண்டு நாட்கள் உடல்நிலை குறைவாக படுத்து இருக்கும்போதுதான் நமக்கு பெண்ணின் சக்தி என்ன? வீட்டை நிர்வகித்த திறமை என்ன என்பது நம் உள்ளத்துக்கு புலப்படும். குடும்ப தலைவிகளுக்கு வீடே கோவிலாக இருக்க வேண்டும்.
அழகுக்கு தேவை நகையல்ல...
உறவு பாதிக்கும் நகை விஷயத்திலும் உங்கள் குடும்பத்தின் நிலை அறிந்தே நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்றால் அது உங்கள் நன்னடத்தையால் மட்டுமே முடியும். அதற்கு உடைகளும், நகைகளும் தேவையில்லை. மனமும், நன்னடத்தை மட்டுமே முக்கிய அழகாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. வீட்டிற்கு நல்லது என்று நினைக்கும் எந்த காரியத்தையும் அதனை தைரியமாக செய்யுங்கள். சில விஷயங்களை கணவரிடம் தெரிவிக்க வேண்டியிருக்கும். அதில் ரகசியம் வைக்காதீர்கள். யாராவது உங்கள் கணவரை பற்றி தவறாக கூறினால் அதனை கேட்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதனால் உங்களது கணவருடன் உள்ள உறவும் பாதிக்கப்படும், மனமும் புண்படும். புகார் கூறுபவர்கள் கூறிக்கொண்டேதான் இருப்பார்கள் என்று அமைதியாக இருந்துவிட்டால் தொந்தரவு இல்லை.
Article,
{[['
']]}