{[['']]}
இலங்கையில் நடந்த உச்சகட்ட போரின்போது பிடிப்பட்ட பிரபாகரனின் மகன் பாலகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை சிங்கள அதிகாரி கலிங்கே ரத்னே தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த உச்சக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அப்போது தமிழீழ விடுதலை புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்லஸ் கொடுமை படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
அன்றே பிரபாகரனின் இன்னொரு மகன் பாலகன் பாலச்சந்திரனும் பிடிப்பட்டார். அவர் சிறுவன் என்பதால் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கெட் கொடுத்து தண்ணீரும் கொடுத்தவர் கலிங்கே ரத்னே. இவர் 57வது பட்டலியன் அதிகாரி.
ராணுவ தலைமைக்கு இச்செய்தி போய் சேர, உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் கருணா வந்துள்ளார். பாலகனை என்ன செய்வது என்று ஆலோசனை நடந்துள்ளது.
அப்போது கருணா அவனை விட்டு வைத்தால், நாளை இவனே புலிகளின் தலைவன் ஆகிவிடுவான். அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான். உங்களால் தாக்கு பிடிக்க முடியாது, உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறியிருக்குறார்.
கலிங்கே கலங்கி போய்விட்டார். அதன் பின் மூன்று ராணுவ வீரர்கள் பாலகனை சுற்றி நின்று துப்பாக்கியால் சுட்டுக் வீழ்த்தியுள்ளார்கள். இதை அந்த அதிகாரி அவரது வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.
Post a Comment