Latest Movie :
Home » » நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட மாட்டாது

நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட மாட்டாது

{[['']]}
அரசியல் பிரமுகர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றபோதும் முக்கியத்துவம் வழங்கப்பட மாட்டாது என மன்னார் மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

மன்னார் மாவட்டத்தின் பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் ஆட்காட்டிவெளி ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவெழுச்சி நிகழ்வுகளுக்கு உரிய ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளன.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம். இருப்பினும் முக்கியத்துவம் வழங்கப்பட மாட்டாது.

பிரதான பொதுச்சுடர் இரண்டு துயிலுமில்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்களே ஏற்றுவார்கள். ஏனையவர்களுக்கும் தீபம் ஏற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் தமிழ் கலாச்சார உடை அணிந்து வருவது ஏற்புடையதாகும். இதன்போது செல்பி எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும். ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும்.

தமிழீழ விடுதலைக்காக எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தன்னுயிரை தியாகம் செய்த வீர மறவர்களின் தியாக இருப்பிடமே துயிலும் இல்லங்கள் என்பதை மனதில் நிலை நிறுத்தவும்.

அத்துடன், மாவீரர்களின் பெற்றோர்களை, உறவினர்களை, மன ரீதியாக சங்கடப்படுத்துகின்ற செயற்பாட்டில் எவரும் ஈடுபட வேண்டாம் என்பதனை தயவுடன் வேண்டுகின்றோம்.

மேலும், வருகையாளர்கள் அனைவரும் ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். போக்குவரத்திற்குரிய பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே அனைவரையும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this article :

Post a Comment

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger