Latest Movie :
Home » , » இன்று காதலர் தினம்….. உச்சத்துக்குச் சென்ற மலர்கள் விற்பனை!! கொண்டாடும் காதலர்கள் !!

இன்று காதலர் தினம்….. உச்சத்துக்குச் சென்ற மலர்கள் விற்பனை!! கொண்டாடும் காதலர்கள் !!

{[['']]}
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மலர்களின் விற்பனை களை கட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் மலர்களின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நம் நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.



இந்த காதலர் தினம் எப்படி வந்தது?

ரோமில் கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, ராணுவத்தில் சேர இளைஞர்கள் தயங்கியதால் ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு உத்தரவை போட்டான். ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள் என்ற அந்த ஆணை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் ராணுவத்தில் இளைஞர்கள் வேருவார்கள் என மன்னன் நினைத்துள்ளான்.

இந்நிலையில் பாதிரியார் வாலண்டைன் என்பவர் மன்னனின் இந்த அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். இதையறிந்த மன்னன் பாரிரியார் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

பாதிரியாருக்கு வந்த காதல் !

இந்த நேரத்தில்தான் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி அட்டை ஒன்றில் காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வாலன்டைன் !

இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி. வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது.

புனிதராக்கப்பட்ட வாலன்டைன்

சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலின் சின்னம் ரோஜா மலர்கள்…

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் இயற்கை மற்றும் செயற்கை பூங்கொத்துகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதுவும் ரோஜா மலர்கள் கொத்துக் கொத்தாக விற்பனையாகி வருகிறது.


இன்று காதலர் தினம் கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா, கார்னேஷன், லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம், கிரிசாந்தம், பேர்ட் ஆப் பேரடைஸ் உள்ளிட்ட 11 வகையான மலர்கள் விற்கப்படுவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.


பல்வேறு வடிவத்தில் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இயற்கை மலர்களைப் போல் செயற்கை மலர்கள் விற்பனையும் சூடு பிடித்துள்ளன. இதே போல் கிருஷ்ணகிரியிலும் இருந்து ரோஜா மலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
Share this article :

Post a Comment

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger