{[['']]}
தொழில்நுட்ப உலகில் ‘ஏ.ஐ.’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றித் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. இத்துறை சார்ந்த முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் எதிர்கால சாத்தியங்கள் பற்றி உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், பாப் பாடகரும் தொழில்நுட்ப ஆர்வலருமான வில்.லி.யம் (Will.i.am) சொல்லும் கருத்தைக் கேளுங்கள்.
அண்மையில் துபாயில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இவர், “1987-ல் இணையம் எப்படி இருந்ததோ அப்படிதான் செயற்கை நுண்ணறிவு இப்போது இருப்ப”தாகக் கூறியுள்ளார். 1990-களுக்குப் பிறகு இணையம் எப்படி அதிவேக வளர்ச்சி அடைந்ததோ, அதுபோலவே வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவிலும் பெரும் பாய்ச்சல் நிகழும் என்பதே இதன் பொருள்.
Post a Comment