Latest Movie :
Home » , » மாதவிடாய் குறித்து எழுதிய கேரள மாணவிக்கு பேஸ்புக்கில் மிரட்டல்: போலீஸில் புகார்

மாதவிடாய் குறித்து எழுதிய கேரள மாணவிக்கு பேஸ்புக்கில் மிரட்டல்: போலீஸில் புகார்

{[['']]}
மாதவிடாய் குறித்து கவிதைகள் எழுதியது மத நம்பிக்கைகளை காயப்படுத்தும்விதமாக உள்ளதெனக்கூறி சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கு கேரளாவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நவாமி ராமச்சந்திரன் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். 'ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.

இவர் சமீபத்தில் வலைதளங்களில் வலதுசாரிகளின் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் எழுதிய மாதவிடாய் சார்ந்த கவிதைகளுக்காக மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து நவாமி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:

''ஏற்கெனவே மாதவிடாய் குறித்து சமூக வலைதளங்களில் பேசியதால் மிரட்டலுக்கு ஆளான இளம்பெண் ஒருவரை ஆதரித்துதான் இந்தக் கவிதையை நான் எழுதினேன். என்னை எதிர்ப்பவர்கள் பேஸ்புக்கில் மட்டுமின்றி நேரிலும் மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.



இந்த வார தொடக்கத்தில் பள்ளி செல்லும் எனது சகோதரி லட்சுமி அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் மிரட்டப்பட்டார். பைக்கில் வந்த சில நபர்கள், முகமூடி அணிந்துகொண்டு தங்கள் முகங்களை மறைத்திருந்தனர். அப்போது என் தங்கைக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சமீபத்திய சம்பவங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் இருக்கும் என்று தோன்றுகிறது'' என்றார்.

சட்டக் கல்லூரி மாணவி நவாமி ராமச்சந்திரனின் தங்கை லட்சுமியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.


இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Share this article :

Post a Comment

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger