{[['']]}
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கை கான நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் செல்லத்துரை விழாவிற்கு தலைமையேற்று , நிதி வழங்கினார். இதனை ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கை துறைத் தலைவர் விஜய் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார்.
மதுரை மாவட்ட ஆட் சியர் வீரராகவ ராவ் சிறப்புரை ஆற்றினார். தனது ஒரு மாத சம்பளத்தை ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்காக வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் காமராஜர் பல்கலை கழகம் சார்பில் ரூபாய் 21 லட்சம் நிதி வழங்கப்பட்டது. பல்கலை கழக ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், மாலை நேர கல்லூரி நிர்வாகிகள் ஒரு நாள் ஊதியம் ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டது.
மேலும் தமிழ் ஆர்வலர்கள் எக்ஸல் குமார் ரூ2 லட்சம், அழகேசன் ரூ 1 லட்சம், மற்றும் பேராசிரியர் முரளி பட்சி ராஜன் ரூ 25 ஆயிரம், பேராசிரியர் நிர்மலா ரூ 25 ஆயிரம் வழங்கினர்.
ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைத் துறைத் தலைவர் விஜய் ஜானகிராமன் பேசும் போது. 362 வருட பழமையான பல்கலை கழகம் ஹார்வர்டு , இதில் நமது தொன்மையான பழமையான மொழி தமிழ் அதை உலகளவில் பரவச் செய்ய வே தமிழ் இருக்கை அமைக்கப்படுகிறது.
தமிழ் அங்கிருந்தால் நமக்கு பெருமை, 112 வருடங்களாக சமஸ்கிருதம் இருக்கை உள்ளது. ஏன் நமது தமிழ் இருக்கை அமையக் கூடாது. விஜய் ஜானகிராமன் கழகத்தில் ஆய்வு கட்டுரைகள் உலகப் புகழ் பெற்றது. ஆகவே தமிழ் கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவந்தால் உலகம் முழுவதும் தெரியும்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள நீங்கள் காமராஜர் பல்கலை கழகத்தில் நிதியளித்தது பெருமைக்குரியது. என விஜய் ஜானகிராமன் கூறினார்.
Post a Comment